Saturday, November 16, 2024
Homeஅறிவிப்புகள்புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி - 2020

புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020

போட்டிக்கான கடைசி தேதி மாற்றம்

 

 

 

 

 


*

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற இப்போட்டி, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பெயரில், ‘புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020’ என அறிவிக்கப்படுகிறது.

நோக்கம்

• புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது, படைப்புத் திறனை ஊக்குவிப்பது, படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களை பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

• இந்த குறுநாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

• ஒரு நபருக்கு ஒரு குறுநாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

• குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரம் வார்த்தைகள் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

• குறுநாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (WORD.DOC) –ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

• மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி puthumaipithan.award@gmail.com

• படைப்பினை அனுப்புவதற்கு கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதி, 2020.

• போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் என கண்டறிவது, அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

உறுதிமொழி

• படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

• ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும்.

• மேலும் படைப்பானது தனது சொந்த கற்பனையில் உருவானது என்றும் அது, எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைந்திருக்க வேண்டும்.

தேர்வும் பரிசும்

• இப்போட்டியின் முடிவில் மொத்தம் 10 குறுநாவல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குறுநாவலுக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நடுவர்கள் பத்துக்கும் குறைவான குறுநாவல்களையே பரிசுக்குரியன எனத் தேர்ந்தெடுத்தால், அவற்றுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். அறிவிப்பின்படியான மிச்சத் தொகை, அடுத்த போட்டிக்குரிய தொகையுடன் இணைக்கப்படும்.

• தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு குறுநாவலும் தனித்தனி நூலாகப் பிரசுரிக்கப்படும்.

• நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

• இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் குறுநாவல்களின் முதல் பதிப்பை யாவரும் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிடும்.

******

RELATED ARTICLES

16 COMMENTS

  1. வாய்ப்பளித்தமைக்கு நன்றி,
    என் நாவலையும் அனுப்பியுள்ளேன்.
    வந்து சேர்ந்ததா என்பதைத் தயவு செய்து பதில் கூறவும்.

  2. வணக்கம்!

    “குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரம் வார்த்தைகள் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே இருக்க வேண்டும்”

    என்பதில் அதிகபட்சம் 12 ஆயிரம் என்பதை குறிப்பிடுகிறதா அல்லது குறைந்தபட்சம் 10 முதல் 12 ஆயிரம் வரை இருந்து அதிகப்டசம் எவ்வளவு வார்த்தை கள் வரை இருக்கலாம் என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

    தெளிபடுத்துங்களேன்!

  3. புதுமைப்பித்தன் நினைவு குறும் நாவல் போட்டிக்கு படைப்புகள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 15 என்று முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருக்க கண்டேன். அது உண்மையா? சமர்ப்பிக்க வேண்டிய நாள் மாற்றப்பட்டுள்ளதா? விளங்குவீர்கள் என்றால் மிகவும் நல்லதாகவும், உபயோகமாகவும் இருக்கும்.

      • ஆகஸ்ட் 15 வரை அனுப்பலாம் அல்லவா? மிக்க நன்றி. போட்டியில் கலந்து கொள்ள தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமா?

  4. என் பெயர் அ.மோகனா புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டிக்கு என்னுடைய குறுநாவலை நேற்று அனுப்பினேன். அது தொடர்பாக உறுதிபடுத்தும் மின்னஞ்சல் வரவில்லை

  5. போட்டிகளின் முடிவுகளை வெளியிட நீண்ட காலம் எடுப்பது என்பது ஆரோக்கியமாக தோன்றவில்லை. போட்டி கதைகள் நடுவர்களையாவது சென்று சேர்ந்ததா தெரியாது. ஏதாவது அறிவிப்புகள் தளத்தில் உள்ளதா? கிடையாது. ஏன் இப்படி?

  6. குறு நாவல் போட்டியின் முடிவுகள் எப்போது என்பதை அறிய விரீம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular