{"title":"நாவல்","description":"","products":[{"product_id":"crocodile","title":"முதலை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003eஎழுத்தில் இன்னும் வெளிவராத தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488446660771,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Muthalaiwrapper.jpg?v=1774010886"},{"product_id":"mathumega-oozhi","title":"மதுமேக ஊழி","description":"\u003cp\u003eமதுமேக ஊழி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47493987369123,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Mathumegaoozhi.jpg?v=1774278632"},{"product_id":"unakkul-oruvan","title":"உலகில் ஒருவன்","description":"\u003cp\u003eஉலகில் ஒருவன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506754175139,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Ulakiloruvanwrapper.jpg?v=1774439615"},{"product_id":"29-article-29","title":"ஆர்ட்டிகிள் 29","description":"\u003cp\u003eஆர்ட்டிகிள் 29\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509561770147,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Article291.jpg?v=1774534222"},{"product_id":"kanakaththin-kural","title":"கானகத்தின் குரல்","description":"\u003cp\u003eகானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531383586979,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/kanagaththinkural.png?v=1775394687"},{"product_id":"neelakandam","title":"நீலகண்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன வாழ்வின் பெரும் சிக்கல்களில் ஒன்றாகத் திகழும் குழந்தைப்பேறு என்கிற புள்ளியை முன்வைத்து, 'ஆட்டிசம்' பின்புலமுள்ள ஒரு கதைக்களத்தை இந்த நூற்றாண்டின் சூழலில் பேசுகிறது இந்நாவல். தற்சிந்தனை நோய் அல்லது மதி இறுக்கத்தின் பாதிப்பை ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பார்வையிலும் பதிவதுடன், அது சார்ந்த பிரச்சனைகள் அநேகமானவற்றை ஊடுருவிச் செல்கிறது இந்நாவல். ஒரு எளிய எதார்த்த அடிக்கட்டமைப்புடன் தொன்மங்கள், குழந்தைகள் தனியுலகம், என பல்குரல்தன்மை கொண்டதாக உள்ள இந்த நாவல். நீலகண்டம் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படத் தயாராக இருக்கும் விஷத்தைப் பற்றி பேசுவதால் அது தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531469734051,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/neelakandam.png?v=1775395484"},{"product_id":"pulisaarai","title":"புலிசாரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழரின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக்கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுகிறது. அது எக்காலத்திலும் நம் இளவரையறைக்குள் கழன்றுகொண்டே வருகிறது. ஆதிதொட்டு சமீபத்திய புரட்சி வரை காலம் அதன் முக்கியத்துவத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கையில், அது சார்ந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட நபர்களை வெறும் வீரம், பெருமை போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட கதை இது. அதனாலோ என்னவோ இக்கதை, வாடியின் களத்தினுள் பெரும்பாலும் பயணிக்காது அதைச்சுற்றி கழலும் மனிதர்களின் எண்ணங்களில் தன்னை வடித்துக் கொண்டது. களத்திற்குமுன் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கைமுறை பின்னப்பட்டிருப்பதை அறிகையில் ஜல்லிக்கட்டுக் களத்தைப் பற்றிய பார்வை நமக்கு விரிவுபடும். அது வெளிக்கொணரும் உண்மைகளை முக்கியமானவையாக கருதுகிறேன். இங்கு எதைப் புனிதமாக்கவேண்டும் என்கிற வரையறை ஒருவர் கையில் இருக்கும்வரை நாம் எதிர்கதையாடல்களை முன்வைத்தே தீரவேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531539660963,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/pilisaarai.png?v=1775395721"},{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003cbr\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன. வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003cbr\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது.....?\u003cbr\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003cbr\u003eஒரு வாழ்க்கை பறிக்கப்பட்ட கொடுந்துயரத்தின் எதிரில் ஒரு பெருங்கொண்டாட்டம் நிகழ்வது தான் 'கெளிமதம்'.\u003cbr\u003eஇக்கெளிமதம் வட்டார நாவலாக இருந்தாலும் ஒரு பெருநிலத்தின் கீழ்மையை இப்படியான பெருமிதங்களில் மறைத்துக்கொள்வதை பலரும் உணர முடியும், மேலும், இந்த எழுத்தாளரைப் போலவே வட்டார மொழியும் இலக்கியப் பரப்பில் புதுவரவு எனச் சொல்லலாம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47602633080995,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SSKELIMATHAM.png?v=1777097784"},{"product_id":"vaiyasi19","title":"வையாசி 19","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஇன்பா சுப்ரமணியன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003ch5\u003eகடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல், 1920ல் துவங்கி, 1945ல் முடிகிறது. இந்தியாவிலும், மலேஷியாவிலும், இந்த நாவலின் கதை நடைபெறுகிறது. அன்றைய கால கட்டத்தில், பெண்கள் கடல் தாண்டிச் செல்வதில்லை. அத்தகைய சூழலில், கணவனை இழந்த பெண், கடல் தாண்டி மலேஷியா சென்று, அவள் சந்திக்கும் வாழ்க்கை, அதில் அவளைக் கடக்கும் ஜப்பானிய யுத்தம் என விரிகிறது. முக்கியமான ஆவணங்களின் தொகுப்பாக வந்துள்ள முக்கிய நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003eதினமலர்\u003c\/h5\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47620848681123,"sku":null,"price":790.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-05-02233326.jpg?v=1777745563"},{"product_id":"4-சீஸன்ஸ்","title":"4 சீஸன்ஸ்","description":"\u003cp\u003eA novel by fragments - GenZ trilogy\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதமிழில் ஒரு பிராக்மென்டரி நாவல் .. பற்பல சம்பங்களை ஒன்றிணைத்து ஒரு சில அத்தியாயங்களாக உருவாக்கப்பட்ட நாவல் ஆகும். இதில் காதல்தான் பிரதானம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eHow Much Do you Love me, Pain of Love- Dusk of summer, Pain of Lust - November Drizzle, Pain of desire - Spring of Forlorn -இந்த நான்கு அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 4 Seasons.காதல் கதைகள் தமிழில் மிகவும் குறைவு. அதிலும் பிராக்மென்டரி நாவல் அதனுடைய உச்சம். இதனுடைய எழுத்துமுறையே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். இதில் இன்னும் ஒரு படி மேல போய் \"Pain of Love \" எழுதுவதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேல். ஒரு வித்தியாசமான புதுமையான தொகுப்பு வாசிக்கனும் நினைக்கிறவங்க கண்டிப்பா படிக்கலாம். துளசி உங்களை ஆட்கொள்ளுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47622171230371,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/4seasons.jpg?v=1777828583"},{"product_id":"வீரத்-திருநங்கை","title":"வீரத் திருநங்கை","description":"\u003cp\u003eபதினெட்டு நாட்கள் நடந்த குருஷேத்திரப் போரில், ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத சிகண்டியின் அம்பினால் வீழ்த்தப்பட்டுப் படுக்கையில் கிடந்த பிதாமகன் பீஷ்மரின் எண்ணவோட்டங்களாக இக்கதை விரிகிறது. மேலோட்டமாகப் பங்காளிகள் சண்டைக் கதை என்பது பரவலாகத் தெரிந்ததுதான் என்றாலும், இக்கதையினூடாக அக்காலத்திய நாட்டு நிலவரம், அரசர்களின் போக்கு, அங்கு பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள், சமுதாய அமைப்பு, ஆட்சி செய்தவர்களின் முதன்மை நோக்கம் போன்ற அனைத்தும் அலசப்படுகின்றன. பிதாமகனிலிருந்து, பாண்டவர், கௌரவர், கர்ணன், கண்ணன், பரசுராமன், சால்வன், எனப் பலப்பல ஆண்கள் கதையினூடாக இருந்தாலும், கதையின் முதன்மையிடம் 'அம்பை' என்ற காசி அரசனின் மகளுக்கே உரித்தாகும். அவளே இப்புதினத்தின் தலைவி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅம்பையை முதன்மையாகக் கொண்டு, இன்றைய அரசியலையும் தேவையான சமூகக் கருத்துகளையும் சொல்ல முடியும் என மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூல் வெற்றிகரமாக பன்னிரண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது..\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629045530787,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Veerathirunangai.png?v=1777969977"},{"product_id":"my-dear-helen","title":"மை டியர் ஹெலன்","description":"\u003cp\u003eசில ரகசியங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும்.\u003cbr\u003eசில ரகசியங்கள் நிழலாய் நம்மைப் பின்தொடரும்.\u003cbr\u003eபல ஆண்டுகளாகப் புதைந்திருந்த உண்மை, இருள் கிழித்து எழுகிறது.\u003cbr\u003eஒவ்வொரு தடயமும் - ஒரு பொய்யை அடையாளம் காட்டுகிறது.\u003cbr\u003eஒவ்வொரு திருப்பமும் - யாரோ ஒருவரின் முகமூடியை கிழிக்கிறது.\u003cbr\u003eஉண்மையைத் தேடும் அந்தப் பயணம், பலரது நம்பிக்கையை அழித்து விடக்கூடும்.\u003cbr\u003eயாரை நம்புவது? யாரை சந்தேகிப்பது?\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47629444645027,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Helen.png?v=1777975626"},{"product_id":"எண்-பெயர்-கட்டியங்காரன்-1","title":"எண் பெயர் கட்டியங்காரன்","description":"\u003cp\u003eசீனாவில் முதல் கொரோனா தொற்று ஆரம்பிக்கையில் தொடங்கும் நாவல் சமகாலத்தின் அரசியல் நிகழ்வுகள், சமூக ஊடக அரசியல், சுதந்திரமான ஊடகவியலாளர்கள், திரைத்துறைப் பின்னணி, உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அதிகார மையம், உலகை ஆளும் எண்களின் கதை... என கோவிட் தொற்றுப் பேரழிவின் பின்புலத்தில் எல்லாவற்றையும் இணைத்துச் செல்கிறது.\u003cbr\u003eஅஸாஞ்சே, துருவ் ரதீ போன்ற தனி மனிதர்கள் அடிக்கின்ற விசில் சப்தம் எப்படி ஓர் எதிர் சுழலை வீரியத்துடன் செயல்படுத்துகிறது என்பதைப் புரிய வைக்கும் முயற்சிதான் இந்தக் கட்டியங்காரன்.\u003cbr\u003eதிரைப்படத்தைப் போல அதிவேகமாகச் செல்லும் கதையோட்டத்தோடு அதிர்ச்சிகரமான தகவல்களைப் பின்னணியில் வைத்து சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629585186979,"sku":null,"price":153.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ENPEYAR.png?v=1777980267"},{"product_id":"லவ்-டேல்","title":"லவ் டேல்","description":"\u003cp\u003eகிரைம் நாவல்களின் வகைமைகள் தற்போது அருகிவிட்ட நிலையில் தொண்ணூறுகளின் பல்ப் ஃபிக்ஷன்களின் கனத்தைக் கொண்டு வந்திருக்கின்றது இந்நாவல்.\u003cbr\u003eஓர் அழகான அமைதியான மலைவாழிடம். அங்கே தொடர் கொலைகள் நடக்கின்றன. யாரும் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள்... அந்தக் கொலைகளின் பின்னணி என்ன? மர்மங்களின் திரை விலகியதா?\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47648916537507,"sku":null,"price":105.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/lovetaleWRAPPER.png?v=1778566855"},{"product_id":"தழல்","title":"தழல்","description":"\u003cp\u003eபெரும் மனச்சுமையுடன் வாழ்ந்துவரும் மார்ட்டினின் நடத்தையில் ஏற்படும் புதிர்கள் உருவாக்கும் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருப்பெறும் நாவல் 'தழல்'. குற்ற உணர்வு, பழியின் சுமை ஆகியவை வாழ்வின் நுட்பமான புதிர்களாக மாறும் விந்தையின் மீது 'தழல்' வெளிச்சம் பாய்ச்சுகிறது. பழியின் சுமை ஏன் இறக்க முடியாத சிலுவையாக மாறுகிறது என்ற கேள்விக்கான விடையை நாவலாசிரியர் தரவில்லை. வாசகர்கள் தங்களுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறார்.\u003cbr\u003eதீவிரமானதொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் தீவிரம் குன்றாமல் கையாண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தீவிரமான கேள்விகளையும் விசாரணைகளையும் விடைதேடும் பயணங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. இந்த முயற்சியே இந்த நாவலின் வலிமை.\u003cbr\u003eஅரவிந்தன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689923690659,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/THAZHAL.png?v=1779368236"},{"product_id":"nakutti","title":"நாக்குட்டி","description":"\u003cp\u003eஆணின் தத்தளிப்பும், அவஸ்தையும், தனக்குள் திரள்வது இன்னதென்று சொல்லத்தெரியாத போதாமையும், கட்டுக்குள் இருந்துகொண்டே மிரளும் மூர்க்கமும் ஒருசேர நகுலனிடம் குவிய துளசியின் சிறு அசைவு போதுமானதாக இருக்கிறது. துளசி வகுக்கும் எல்லைக்கோட்டினை மீறத்துணிவதும், பின்வாங்குவதும், தோற்பதும், அவளிடமே இறைஞ்சுவதும்; மூச்சு முட்டும் இந்தக் காதலை விட்டுவிடலாமென்றால் காதலில் ஆதியுமில்லை அந்தியுமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து மறக்க வேண்டும்.\u003cbr\u003eஅதற்காகவேனும் காதல் கொள்வோம் என்கிறாள் துளசி.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47705903792291,"sku":null,"price":210.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/NAAKKUTTI.png?v=1779784340"},{"product_id":"moondraam-judi","title":"முன்றாம் ஜூடி","description":"\u003cp\u003eநம் மனதுக்கு நெருக்கமானவர்களின் பெயர் கொண்ட ஒருவரைச் சந்திக்கும்போது பெயருக்காகவே அவர் மீது ஒரு நேசம் பிறந்து விடுகிறது. பயணத்தில் தென்படும் ஒரு கடையின் பெயர்ப்பலகை நினைவுகளைக் கிளறி சிறு புன்னகையையோ துளி கண்ணீரையோ வரவழைத்து விடுகிறது. பிரபுவுக்கு ஜூடி என்ற பெயர் அப்படித்தான். அவன் ஜூடிகள் ஒவ்வொரு முறையும் அவனுடைய உலகத்தைத் தகர்த்து மீண்டும் புதிதாக எழுப்பி விட்டுப் போகிறார்கள். அப்படி அதிர வைத்த இரண்டு ஜூடிகளுக்குப் பிறகு சுவாரசியமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் அவன் வாழ்வில் முன்னறிவிப்பின்றி நுழைகிறாள் மூன்றாம் ஜூடி. அவள் அவனை என்ன செய்யக் காத்திருக்கிறாள்?\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47705927090339,"sku":null,"price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/MUNDRAMJUDI.png?v=1779785429"},{"product_id":"sundaravanam","title":"சுந்தரவனம்","description":"\u003cp\u003eஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்று தான் வாழும் உலகம். மற்றொன்று தான் வாழ விரும்பும் அல்லது அறியாமலேயே சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்ற உலகம். எல்லோருக்குமே சாத்தியம் என்றாலும் யாருக்கேனும்தான் தாயம் விழுவதைப் போல. தம்மால் கட்டுப்படுத்த முடியாத மாற்றம் ஒன்றை விழிப்புடன் எதிர்கொள்ள உயிர் மேவும் போராட்டமே இந்த நாவல்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47706017366179,"sku":null,"price":293.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SUNDHARAVANAM.png?v=1779788351"},{"product_id":"kurudhivazi","title":"குருதிவழி","description":"\u003cp\u003eநீர் வற்றிப் போன நிலத்தில், இன்னமும் சூட்டோடு இருக்கும் குருதி படிந்த வேலில் இருந்து விழும் ஒவ்வொரு துளியின் வரலாற்றையும் அந்த மண் மட்டுமே அறியும்.\u003cbr\u003eமண்ணின் அடியில் மறைந்திருக்கும் கதைகளுக்கும், மனித உடல்களில் ஒடிக்கொண்டிருக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு மறைபாதை இருக்கிறது - அதுவே குருதிவழி.\u003cbr\u003e\"குருதிவழி” என்பது ஒரு ஊரின் கதையல்ல - அது மனித மனத்தின் ஆழத்திலிருந்து எழும் குற்ற உணர்வின், முன்னோர்களின் பாவத்தில் அல்லது சாபத்தில் மறைந்த நிழல்களின் குரலாகும். இது ஒரு குடும்பத்தின் கதையாகத் தோன்றினாலும், ஒவ்வொரு தலைமுறையின் காயத்தையும் தாங்கி நிற்கும் இந்நிலத்தின் சமூக வரலாறாக மாறுகிறது.\u003cbr\u003eஇந்நாவலின் கதாபாத்திரங்கள் சில வரலாற்றோடு சம்பந்தப்பட்டவர்கள். போதிலும் வரலாறு *தர்க்கம்* புனைவு என மூன்றிலும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் கதையாடல்.\u003cbr\u003eவரலாறு, நினைவு, புனைவு ஆகியவை குறித்து வலுவான கேள்விகளை வாசிப்பின்பமளிக்கும் இலகுவான மொழியில் எழுப்பிச் செல்கிறது குருதி வழி.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47715306242211,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-05-28at16.37.26.jpg?v=1779966482"},{"product_id":"jonathan-livingstan-kadarparavi","title":"ஜோனதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவை","description":"\u003cp\u003eஜோனதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவை\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47719329300643,"sku":null,"price":98.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/JONATHAN.png?v=1780060872"},{"product_id":"ottraikural","title":"ஒற்றைக் குரல்","description":"\u003cp\u003eஆழ்ந்த தன்வயமற்ற நிலையொன்றை விளைவிக்கும் உத்தியைக் கண்டு கொள்வது, உள்ளடக்கத்தின் அந்த தரிசனத்திற்கான நுண்ணிய கணிப்பு என்றே பொருள் இளங்கோ கிருஷ்ணனின் நுண் கதைகள் எல்லோரும் கருதுவதுபோல அதன் அளவைப் பொருத்ததல்ல. இலக்கியப் படைப்பு வகைமைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் ஓர் எல்லையைக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அத்தகைய எல்லைகளை மறு நிர்ணயம் செய்ய வைக்கும் செயல்போக்கு வழக்கமான 'மன உருவாக்கங்கள்' என்றைக்குமான மனித 'கனிந்த நிலையாகத்தான்' இருக்கக்கூடும். மிக விரிவான வாசிப்பனுபவமும் தகவல் செறிவும் தனிமனித சூழ்நிலை அமைப்பை புதிய கோலங்களாக மாற்றிக் கொள்ளும் இளங்கோ கிருஷ்ணனின் படைப்பு தூண்டல்தான் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று. மேலும் இடையறாத மனித இருத்தலின் நம்பிக்கைக்கான எதிர்நிலையாகவும் இருந்து அவ்விருத்தலை வலுவாக்கவும் செய்கின்றன இக்கதைகள்.\u003cbr\u003eசாகிப் கிரான்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47719342145699,"sku":null,"price":117.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/OTTRAIKURAL.png?v=1780061105"},{"product_id":"sathak-sathak","title":"சதக் சதக்","description":"\u003cp\u003eஆங்கிலத்தில் இளையோர்களுக்கானப் புனைவுகள் என நிறைய வருவதுண்டு.\u003cbr\u003eவிபரணப்படங்களோடோ அல்லது இல்லாமலோ அவர்களுக்கான இலக்கியம் என்பது சாகசம் நிறைந்ததாகவோ அல்லது வாசிப்பை ஊக்கப்படுத்தும் ஊக்கப்புனைவாகவோ அதிகற்பனை மிக்க கதைகளோ தான் இளையோர்களால் கொண்டாடப்படும்.\u003cbr\u003eஅவ்வகையிலே 'சதக் சதக்' எனும் குறுநாவலும் இளையோருக்கான ஒரு சாகசப் புதினம்.\u003cbr\u003eஎழுத்தாளரின் 'குருதிவழி'நாவலில் வரும் காலப் பயணப் பகுதி இளையோர்கள் வாசிப்பிற்கு உகந்த சுவாரஸ்யமான ஒரு குறுநாவல்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47728899915939,"sku":null,"price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SATHAKSATHAK.png?v=1780385675"},{"product_id":"pathupathirangal","title":"பத்துப் பாத்திரங்கள்","description":"\u003cp style=\"text-align: right;\"\u003eகுறுநாவல் எனும் வடிவம் எத்தனை தூரம் சவாலானது என்று ஒரு பக்கம் பேசும்போது, அதனையே லாகவமாகக் கையாண்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் ஆளுமையைக் காட்டுகிறது. ஒரு நாளில் நாம் கடக்கின்ற பத்து பாத்திரங்கள் வழி பசி, காமம், மொழி, தத்துவங்கள், மரணம், காமம் என விசாரணை செய்யும் சுரேஷ் பிரதீப்பின் நுணுக்கமான படைப்பு இது.\u003cbr\u003e66 \"மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு அடுத்தவர்களைப் பற்றிய எண்ணமே இருக்காதா?\" இப்படியான வெவ்வேறு தருணங்களில் எழும் கேள்விகள் நம்மையும் கூட்டு சேர்த்துக் கொள்வதை கதை சொல்லி அறிந்தே இப்படைப்பை எழுதியிருக்கிறார்.\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 42, 0);\"\u003e\u003cem\u003e\u003cstrong\u003e...நூலிலிருந்து\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47728902308003,"sku":null,"price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/PATHUPATHIRANGAL.png?v=1780386182"},{"product_id":"kothali","title":"கொத்தாளி","description":"\u003cp\u003eஇது யூசுப்பின் ஆறாவது நாவல். டாக்கு ஃபிக்சன் என்று தமிழில் ஒரு வகைமை எழுத்தை முன்வைத்து புவிசார் அரசியலை இத்தனை வீரியத்துடனும் சுவாரஸ்யம் குன்றாமலும் எழுதிச் சென்றிருக்கிறார்.\u003cbr\u003eஒரு தாய்வழிச் சமூகத்தின் கதை வழியாக சூழலியல், வரலாறு, மானுடவியல், மொழியியல் என வெவ்வேறு துறைகளின் ஆவணங்களைக் கொண்டு சாதியத்தின் கொடூரமான உள்ளடுக்குகளையும், சாதிய வன்முறைக்குப் பின் இருக்கும் அரசியலையும் களமாகக் கொண்டிருக்கும் நாவல்.\u003cbr\u003eஒரே மூச்சில் வாசிக்கக் கூடிய க்ரைம் திரில்லர் என்றாலும் தற்காலத்தில் பெரிதும் கவனம் பெறாத ஒரு கார்ப்பரேட் ஊழலையும், நாள்தோறும் பெட்டிச்செய்திகளில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இடம்பெறும் சாதியச் சண்டைகள், வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணத்தையும் துப்பறியும் நாவலாக அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47729044390051,"sku":null,"price":247.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KOTHTHAAl.png?v=1780397515"},{"product_id":"thevam","title":"தெவம்","description":"\u003cp\u003eகொங்குச் சீமையின் கிரிப்பட்டி, மக்கம்பட்டி கிராமங்களின் கூட்டு ஆன்மாவாகத் திகழும் கருப்பசாமிக்கு 'தெவம்' சாட்டப்படுகிறது. பிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு\u003cbr\u003eசொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு... பனி படர்ந்த சிக்கிம் எல்லையில் நின்றுகொண்டு தன் நிலத்துச் செம்பூவைத் தேடும் தேவாவின் ஏக்கம்... என நாவல் எளிய மனிதர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியலைப் பதிவு செய்கிறது.\u003cbr\u003eஅதிகாரத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான போராட்டம், ஜாதிய அடுக்குகள், கைவிடப்பட்ட நிலங்களின் மௌனம் என விரியும் இந்தக் கதையில், தன் மக்களின் துயர் துடைக்கக் கருப்பசாமி சவுக்கோடு இறங்கி வரும் தருணம் அதிரவைக்கும் அனுபவம்.\u003cbr\u003eயாவரும் பதிப்பகம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47732267319459,"sku":null,"price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/THEVAMM.png?v=1780470068"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d.oembed?page=2","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}