{"title":"Award Winning Books","description":null,"products":[{"product_id":"ambu-padukkai","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531144118435,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ampupadukkai.png?v=1775393980"},{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003cbr\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன. வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003cbr\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது.....?\u003cbr\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003cbr\u003eஒரு வாழ்க்கை பறிக்கப்பட்ட கொடுந்துயரத்தின் எதிரில் ஒரு பெருங்கொண்டாட்டம் நிகழ்வது தான் 'கெளிமதம்'.\u003cbr\u003eஇக்கெளிமதம் வட்டார நாவலாக இருந்தாலும் ஒரு பெருநிலத்தின் கீழ்மையை இப்படியான பெருமிதங்களில் மறைத்துக்கொள்வதை பலரும் உணர முடியும், மேலும், இந்த எழுத்தாளரைப் போலவே வட்டார மொழியும் இலக்கியப் பரப்பில் புதுவரவு எனச் சொல்லலாம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47602633080995,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SSKELIMATHAM.png?v=1777097784"},{"product_id":"vaiyasi19","title":"வையாசி 19","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஇன்பா சுப்ரமணியன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003ch5\u003eகடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல், 1920ல் துவங்கி, 1945ல் முடிகிறது. இந்தியாவிலும், மலேஷியாவிலும், இந்த நாவலின் கதை நடைபெறுகிறது. அன்றைய கால கட்டத்தில், பெண்கள் கடல் தாண்டிச் செல்வதில்லை. அத்தகைய சூழலில், கணவனை இழந்த பெண், கடல் தாண்டி மலேஷியா சென்று, அவள் சந்திக்கும் வாழ்க்கை, அதில் அவளைக் கடக்கும் ஜப்பானிய யுத்தம் என விரிகிறது. முக்கியமான ஆவணங்களின் தொகுப்பாக வந்துள்ள முக்கிய நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003eதினமலர்\u003c\/h5\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47620848681123,"sku":null,"price":790.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-05-02233326.jpg?v=1777745563"},{"product_id":"தமிழ்நாட்டுப்-பழங்குடிகள்","title":"தமிழ்நாட்டுப் பழங்குடிகள்","description":"\u003cp\u003eதமிழ்நாட்டில் ஏழை எளிய, குரலற்ற விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிச் சமூகங்கள் காடு, மலை, சமவெளி என மாநிலத்தின் வெவ்வேறு புவியியல் பரப்புகளை தங்களுடைய மரபார்ந்த வாழிடங்களாகக் கொண்டு அல்லது பல்வேறு காரணங்களால் இடம் பெயர்ந்து புதிய இடங்களில், சூழ்நிலைகளில் வசித்து வருகின்றனர். நீண்டவரலாறும், தொன்மையும் கொண்ட இச்சமூகங்கள் தங்களுக்கென்று சமூக அமைப்பு வாழ்வாதாரச் செயல்பாடுகள், மரபார்ந்த உரிமைகள், அறிவு, நம்பிக்கைகள், மதிப்பீடுகள், எனத் தனித்துவமான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கின்றனர். பழங்குடிச் சமூகங்களின் மரபார்ந்த வாழிடங்களில் அவர்கள் தாள் பூர்வீகக்குடிகள். இவர்களிடையே சமூக (சாதீய) அடுக்கு முறை இல்லை. பிறப்பால் மேலோர், கீழோர் என்கிற பாகுபாடு கிடையாது. நாட்டார் தெய்வங்கள். சமஸ்கிருத தெய்வங்கள் என்கிற வேறுபாடு கிடையாது. சைவம், அசைவம் என்கிற கருத்தாக்கங்கள் இல்லை.\u003cbr\u003eதமிழ்ச் சமூக வரலாறு குறித்து சற்றுப் பின்னோக்கிச் சென்று சங்க இலக்கியங்களில் நாம் ஆய்ந்தறிந்த மரபான முறைமைகளை, பண்டையத் தமிழர் வாழ்வின் நடைமுறைகளின் பிரதிபலிப்பாகக் கொள்வோமானால் அது போன்ற நடைமுறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை நிகழ்கால வாழ்க்கையில் கொண்டிருக்கும் பழங்குடிச் சமூகங்கள், தமிழ்ச் சமூக வரலாற்று மரபின் எச்சங்கள் அல்லது நிகழ்காலத்தில் வாழும் தொல்லியல் சமூகங்கள் எனக் கருத வாய்ப்புகள் உண்டு.\u003cbr\u003eவாழ்க்கை குறித்து பழங்குடிகளின் பார்வை, இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதம், அதள் மேலாண்மை, அதற்கேற்றார்போல உருவாக்கிக்கொண்ட சமூக நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், போன்றவற்றிலிருந்து பொது நீரோட்டச் சமூகங்கள் அறிந்து கொள்வதற்கும், படிப்பினைகள் பெறுவதற்கும் ஏராளமான தகவல்கள் உண்டு.\u003cbr\u003eபழங்குடிகளின் வளர்ச்சி அல்லது மேம்பாடு என்பது அவர்களின் தேவையிள் அடிப்படையில் வாழ்க்கைக்குத் தேவையான கூறுகளை வெளிப்புறத்திலிருந்து உள்வாங்கி நவீனமயமாதல், தவிர தங்களின் மரபினையும், மதிப்பீடுகளையும் தக்க வைத்தல் என்கிற உகந்த கலவையாக இருக்கவேண்டும். பண்பாடும். தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629422264483,"sku":null,"price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TamilNattipazhangudikal.png?v=1777974053"},{"product_id":"பதிமூன்று-மோதிரங்கள்","title":"பதிமூன்று மோதிரங்கள்","description":"","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47982020427939,"sku":null,"price":165.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot_20260811-232300_FilesbyGoogle_2_jpg_e7bb83f8-7ccc-43f1-876f-5765d84e1373.jpg?v=1786471002"},{"product_id":"kooththondru-kooditru","title":"கூத்தொன்று கூடிற்று","description":"","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48016016441507,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"monsieur-van-gogh","title":"மெஸ்யூர் வான்கா (முன் பதிவுச்சலுகை)","description":"\u003cp\u003eமுதல் பதிப்பு முடிந்துவிட்டது..  இரண்டாம் பதிப்பின் முன்பதிவு அறிவிப்பு. நூல்கள் செப்டம்பர் மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்..\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eLust for Life எனும் பெயரில் இர்விங் ஸ்டோன் எழுதிய வான்காவின் வாழ்க்கை வரலாற்று நாவல். தமிழில் எளிய நடையில், சிறப்பான வடிவமைப்பில் வெளிவருகிறது..\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48039754891427,"sku":null,"price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Vangogh.png?v=1787657599"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/award-winning-books.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}