{"title":"Home page","description":null,"products":[{"product_id":"avalumnaanum","title":"அவளும் நானும்","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன. \u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதிரைப்படங்களில் நகைச்சுவை ஒரு தொடராகவும், கதை மற்றொரு தொடராகவும் இடம் பெறுவதுபோல் நூலாசிரியரின் இளம்பருவ நிகழ்ச்சிகள் கட்டுரைகளின் முற்பகுதியில் ஒரு தொடராகவும், கோதையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பிறபகுதியில் மற்றொரு தொடராகவும் அமைந்துள்ளன.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- முனைவர் தெ. ஞானசுந்தரம்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e****************************************************************\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47374347075747,"sku":null,"price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/avalum_0da71591-3721-4249-be6e-a435a2177e7d.jpg?v=1772275917"},{"product_id":"panangkaai-mayilai","title":"பனங்காய் மயிலை","description":"\u003cp\u003eபனங்காய் மயிலை மற்றும் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு.\u003cbr\u003eஇந்த தொகுப்பில் பேசப்படும் கதையில் மண், மனிதன், மாடு ஆகியவற்றுக்கிடையிலான உறவு ஒரு கலாச்சார வரலாறு. தென்னகக் கிராமங்களின் உடல் உழைப்பு, திருவிழா, வன்மம், பெருமை, இழப்பு, காத்திருக்கும் மரணம் அனைத்தும் அவருக்கே உண்டான படிம மொழியில் புதிய அனுபவத்தைத் தரும்.\u003cbr\u003eஜல்லிக்கட்டு, கிடை, வாடி, களம்பு, உடுக்கையோசை, இருள் - விடியல் என பின்னணியாக, மனிதனின் அகம்பாவமும் பயமும் ஒரே நேரத்தில் மோதுகின்றன. அரிதாகச் சொல்லப்படும் கிராம வாழ்க்கையின் அடுக்குகளை, சு. வேணுகோபால் உணர்ச்சி அலங்காரம் இன்றி, துல்லியமான மொழியால் முன்வைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47421436723363,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Panangaimayilaiwrapper_e1012238-c260-475f-8fbe-529ae9cb3823.jpg?v=1773234359"},{"product_id":"mailo","title":"மைலோ","description":"\u003cp\u003eஉமா கதிரின் முந்தைய தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'களப எயிறு' கதையில் வரும் யானையின் பெயர், 'பத்தி ஹர்ன்'. இதற்கு தாய்லாந்து மொழியில் 'அற்புதம்' என்று பொருள். யானையின் பேராகிருதி போன்றே, நிலமதிர அசைந்தாடி நடக்கும்போது அனாயாசமாக துதிக்கை வீசும் கனதோரணை போன்றே, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அந்தக் கதை உருவாகியிருக்கிறது. அதையும் ஒரு 'பத்தி ஹர்ன்' எனலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பின் கதைகளை முன்னர் வாசிக்கும்போதே, அவற்றின் பெருந்தச்ச அம்சங்களை இனங்கண்ட ஆனந்தம் எனக்கு. இப்போது மீண்டும் வாசிக்கும்போதும் உமா கதிர் நிறைவைக் கொண்டுவருகிறார். இந்த வெளிப்பாடுகளின் வீழ்படிவாக மனதில் ஒளிரும் அவரது கலா ஆளுமை, இவற்றைப் போன்ற இன்னும் பலவற்றுக்காக காத்திருக்க அறிவுறுத்துகிறது.\u003cbr\u003e- யூமா வாசுகி\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488439255203,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front.jpg?v=1774010965"},{"product_id":"crocodile","title":"முதலை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eதஸ்தேய்வ்ஸ்கி \u003c\/strong\u003eஎழுத்தில் இன்னும் வெளிவராத தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488446660771,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Muthalaiwrapper.jpg?v=1774010886"},{"product_id":"komaraththadi","title":"கோமரத்தாடி","description":"\u003cp\u003eகோமரத்தாடி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491117711523,"sku":null,"price":340.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-03-21at6.28.01PM.jpg?v=1774097904"},{"product_id":"innaisai","title":"இன்னிசை","description":"\u003cp\u003eஇன்னிசை - \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/aravind-yuvaraj\"\u003eஅரவிந்த் யுவராஜ்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491126001827,"sku":null,"price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Innisaiwrapperfront.jpg?v=1774099232"},{"product_id":"iravu-mallathirukkirathu","title":"இரவு மல்லாந்திருக்கிறது","description":"\u003cp\u003eஇரவு மல்லாந்திருக்கிறது - சித்துராஜ் பொன்ராஜ்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491129114787,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/IravuMallanthirukkirathuwrapper.jpg?v=1774099701"},{"product_id":"islamiya-porkalam-2","title":"இஸ்லாமியப் பொற்காலம் (பாகம் 2)","description":"\u003cp\u003eஇஸ்லாமியப் பொற்காலம் (பாகம் 2) -  \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/s-nasrath-rosy\"\u003eஎஸ். நஸ்ரத் ரோஸி\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491131441315,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Islamiyaporkalam2.jpg?v=1774100110"},{"product_id":"kanninun-uyirthumpu","title":"கண்ணிநுண் உயிர்த்தாம்பு","description":"\u003cp\u003eகண்ணிநுண் உயிர்த்தாம்பு - ரா. கிரிதரன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491138617507,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KannununuyirthambuWrapper.jpg?v=1774101090"},{"product_id":"kuppali-padma","title":"குப்பிலி பத்மா","description":"\u003cp\u003eகுப்பிலி பத்மா - \u003ca href=\"https:\/\/www.commonfolks.in\/books\/t-vishnukumaran\"\u003eத. விஷ்ணுகுமாரன்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491143303331,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KuppiliPadmawrapper.jpg?v=1774101831"},{"product_id":"laanjanai","title":"லாஞ்சனை","description":"\u003cp\u003eலாஞ்சனை - எஸ். காமராஜ்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47491145138339,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Laanjanaiwrapper.jpg?v=1774102401"},{"product_id":"rusipetham","title":"ருசிபேதம்","description":"\u003cp\u003eருசிபேதம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506741821603,"sku":null,"price":530.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Rusipethamfront.jpg?v=1774438769"},{"product_id":"sorpozhivugal","title":"சொற்பொழிவுகள்","description":"\u003cp\u003eசொற்பொழிவுகள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506744803491,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Sorpozhivukalwrapperfront.jpg?v=1774438988"},{"product_id":"unakkul-oruvan","title":"உலகில் ஒருவன்","description":"\u003cp\u003eஉலகில் ஒருவன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506754175139,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Ulakiloruvanwrapper.jpg?v=1774439615"},{"product_id":"vanaspathi","title":"வனஸ்பதி","description":"\u003cp\u003eவனஸ்பதி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506757877923,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Vanaspathiwrapper.jpg?v=1774439892"},{"product_id":"3viduthalaikku-munthaiya-sirukathaikal-part-3","title":"விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 3)","description":"\u003cp\u003eவிடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 3)\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506762367139,"sku":null,"price":599.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Viduthalikkumunthaiyatamilsirukathaikal-3wrapper.jpg?v=1774440163"},{"product_id":"iraq-pormunai-anupavangal","title":"ஈராக் போர்முனை அனுபவங்கள்","description":"\u003cp\u003eஈராக் போர்முனை அனுபவங்கள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506771411107,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/3ef2716aa909a807072a143593c9ec50.jpg?v=1774440770"},{"product_id":"slik-smitha-utkara-oru-kal","title":"சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்","description":"\u003cp\u003eசில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506782748835,"sku":null,"price":236.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front_a52f6880-edd7-4c2e-8a42-2ffdcfd84587.jpg?v=1774441959"},{"product_id":"29-article-29","title":"ஆர்ட்டிகிள் 29","description":"\u003cp\u003eஆர்ட்டிகிள் 29\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47509561770147,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Article291.jpg?v=1774534222"},{"product_id":"avalum-nanum2","title":"அவளும் நானும் 2","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e \n\u003cp\u003eபெண் குழந்தை மேல் பிரியத்தைக் கொட்டி வளர்க்கின்ற சமுதாயம் நம்முடையது. அதே நேரத்தில்,அந்தச் சிறுமி வளர, வளர அவளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை வைத்து பத்திரமாகப் போற்றி வளர்க்கச் செய்வதும் சமூக அத்துக்களை கரிசனத்தோடு விதித்து நடப்பாக்குவதும் அந்தச் சூழலே.\u003cbr\u003e\u003cbr\u003eஸ்ரீரங்கம் என்ற சிறு நகரில் எட்டு வயதுப் பேத்தியோடு வசிக்கும் அம்மம்மா  கனிவையும் கண்டிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து அவளுக்குத் தரும் தன் வரலாற்றுக் கதையாடல் முழுக்க சின்னஞ்சிறு உரையாடல்கள் வடிவில் நேர்த்தியாக சித்தரிக்கிறார் ரம்யா. A narrative of carefully arranged staccato sentences.\u003cbr\u003e\u003cbr\u003eஉபதேசிக்காத, கண்டிக்காத, குமைய வைக்காத, படாடோபமில்லாத பனுவலாக ‘அவளும் நானும்’ நிறைவான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. இரண்டுவிதக் கதையாடல்களில் ரெட்டைக் குதிரையேறி வெற்றிகரமாக சஞ்சரிக்கிறார் ரம்யா. சுஜாதா பாரம்பரியத்தில் இன்னொரு சுவாரசியமான ஸ்ரீரங்கத்து கதைசொல்லி.\u003c\/p\u003e\n\u003cp\u003e- இரா. முருகன்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47530978115747,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-07at12.49.05PM.jpg?v=1775546415"},{"product_id":"neelakandam","title":"நீலகண்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன வாழ்வின் பெரும் சிக்கல்களில் ஒன்றாகத் திகழும் குழந்தைப்பேறு என்கிற புள்ளியை முன்வைத்து, 'ஆட்டிசம்' பின்புலமுள்ள ஒரு கதைக்களத்தை இந்த நூற்றாண்டின் சூழலில் பேசுகிறது இந்நாவல். தற்சிந்தனை நோய் அல்லது மதி இறுக்கத்தின் பாதிப்பை ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பார்வையிலும் பதிவதுடன், அது சார்ந்த பிரச்சனைகள் அநேகமானவற்றை ஊடுருவிச் செல்கிறது இந்நாவல். ஒரு எளிய எதார்த்த அடிக்கட்டமைப்புடன் தொன்மங்கள், குழந்தைகள் தனியுலகம், என பல்குரல்தன்மை கொண்டதாக உள்ள இந்த நாவல். நீலகண்டம் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படத் தயாராக இருக்கும் விஷத்தைப் பற்றி பேசுவதால் அது தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531469734051,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/neelakandam.png?v=1775395484"},{"product_id":"pulisaarai","title":"புலிசாரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழரின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக்கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுகிறது. அது எக்காலத்திலும் நம் இளவரையறைக்குள் கழன்றுகொண்டே வருகிறது. ஆதிதொட்டு சமீபத்திய புரட்சி வரை காலம் அதன் முக்கியத்துவத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கையில், அது சார்ந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட நபர்களை வெறும் வீரம், பெருமை போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட கதை இது. அதனாலோ என்னவோ இக்கதை, வாடியின் களத்தினுள் பெரும்பாலும் பயணிக்காது அதைச்சுற்றி கழலும் மனிதர்களின் எண்ணங்களில் தன்னை வடித்துக் கொண்டது. களத்திற்குமுன் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கைமுறை பின்னப்பட்டிருப்பதை அறிகையில் ஜல்லிக்கட்டுக் களத்தைப் பற்றிய பார்வை நமக்கு விரிவுபடும். அது வெளிக்கொணரும் உண்மைகளை முக்கியமானவையாக கருதுகிறேன். இங்கு எதைப் புனிதமாக்கவேண்டும் என்கிற வரையறை ஒருவர் கையில் இருக்கும்வரை நாம் எதிர்கதையாடல்களை முன்வைத்தே தீரவேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531539660963,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/pilisaarai.png?v=1775395721"},{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003cbr\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன. வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003cbr\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது.....?\u003cbr\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003cbr\u003eஒரு வாழ்க்கை பறிக்கப்பட்ட கொடுந்துயரத்தின் எதிரில் ஒரு பெருங்கொண்டாட்டம் நிகழ்வது தான் 'கெளிமதம்'.\u003cbr\u003eஇக்கெளிமதம் வட்டார நாவலாக இருந்தாலும் ஒரு பெருநிலத்தின் கீழ்மையை இப்படியான பெருமிதங்களில் மறைத்துக்கொள்வதை பலரும் உணர முடியும், மேலும், இந்த எழுத்தாளரைப் போலவே வட்டார மொழியும் இலக்கியப் பரப்பில் புதுவரவு எனச் சொல்லலாம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47602633080995,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SSKELIMATHAM.png?v=1777097784"},{"product_id":"ஆல்ட்-கண்ட்ரோல்-க்ரியேட்","title":"ஆல்ட் + கண்ட்ரோல் = க்ரியேட்","description":"\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.  \u003cbr\u003eபடைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003e[ ] கார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன? \u003cbr\u003e[ ] பேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா? \u003cbr\u003e[ ] மூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?\u003cbr\u003e[ ] கை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள்,  முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்.. \u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது...\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47604153942179,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26112456.jpg?v=1777189759"},{"product_id":"kannatti","title":"கண்ணாட்டி","description":"\u003cp\u003eபொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால்,  ‘groundlings of the pit’ தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள். \u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604155383971,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-26at11.57.21.jpg?v=1777190207"},{"product_id":"kadavulenumspider","title":"கடவுள் எனும் ஸ்பைடர்மேன்","description":"\u003cp\u003eதமிழில் ஒரு முழுமையான நாத்திக நூல்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604181794979,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Screenshot2026-04-26122238.jpg?v=1777190689"},{"product_id":"book-day-bundle","title":"book day bundle","description":"\u003cp\u003eபுத்தகதின சிறப்புத் தள்ளுபடி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47611774959779,"sku":null,"price":999.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/7day7books_30355166-6337-4f7f-a1d9-c1afbfcf7fc7.png?v=1777523109"},{"product_id":"4-சீஸன்ஸ்","title":"4 சீஸன்ஸ்","description":"\u003cp\u003eA novel by fragments - GenZ trilogy\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதமிழில் ஒரு பிராக்மென்டரி நாவல் .. பற்பல சம்பங்களை ஒன்றிணைத்து ஒரு சில அத்தியாயங்களாக உருவாக்கப்பட்ட நாவல் ஆகும். இதில் காதல்தான் பிரதானம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eHow Much Do you Love me, Pain of Love- Dusk of summer, Pain of Lust - November Drizzle, Pain of desire - Spring of Forlorn -இந்த நான்கு அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 4 Seasons.காதல் கதைகள் தமிழில் மிகவும் குறைவு. அதிலும் பிராக்மென்டரி நாவல் அதனுடைய உச்சம். இதனுடைய எழுத்துமுறையே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். இதில் இன்னும் ஒரு படி மேல போய் \"Pain of Love \" எழுதுவதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேல். ஒரு வித்தியாசமான புதுமையான தொகுப்பு வாசிக்கனும் நினைக்கிறவங்க கண்டிப்பா படிக்கலாம். துளசி உங்களை ஆட்கொள்ளுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47622171230371,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/4seasons.jpg?v=1777828583"},{"product_id":"my-dear-helen","title":"மை டியர் ஹெலன்","description":"\u003cp\u003eசில ரகசியங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும்.\u003cbr\u003eசில ரகசியங்கள் நிழலாய் நம்மைப் பின்தொடரும்.\u003cbr\u003eபல ஆண்டுகளாகப் புதைந்திருந்த உண்மை, இருள் கிழித்து எழுகிறது.\u003cbr\u003eஒவ்வொரு தடயமும் - ஒரு பொய்யை அடையாளம் காட்டுகிறது.\u003cbr\u003eஒவ்வொரு திருப்பமும் - யாரோ ஒருவரின் முகமூடியை கிழிக்கிறது.\u003cbr\u003eஉண்மையைத் தேடும் அந்தப் பயணம், பலரது நம்பிக்கையை அழித்து விடக்கூடும்.\u003cbr\u003eயாரை நம்புவது? யாரை சந்தேகிப்பது?\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47629444645027,"sku":null,"price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Helen.png?v=1777975626"},{"product_id":"siruvargalukana-ulaga-puthaga-alamari","title":"சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி","description":"\u003cp\u003e\u003cimg\u003e\u003cimg\u003eஇருபத்தி ஆறு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு ரெகுலராக விஜயம் செய்து வந்ததில் சில விஷயங்களை கவனித்தேன். இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பது என்பதில் ஏற்படும் தெளிவின்மையால் இரண்டு பொதுவான தவறுகளைச் செய்கிறார்கள்.\u003cbr\u003e1. ஆன்லைனில் \/ புத்தகக் கடைக்காரர்களிடம் விசாரித்து அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது.\u003cbr\u003e2. இளம் பெற்றோர்களின் சிறுவயதில் அவர்கள் படித்து ரசித்த புத்தகங்களையே இப்போது அவர்களின் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பது.\u003cbr\u003eஇவையிரண்டுமே சரியான அணுகுமுறை இல்லையென்பதால், இளம் பெற்றோர்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்குவதின் அவசியம் புரிந்தது. கடந்த பத்தாண்டுகளில் விற்பனையிலும் விமர்சனத்திலும் ட்ரென்ட் செட்டர் ஆக இருக்கும் 20 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப்பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக இளையோர்கள் ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003cbr\u003eவாசிப்பில் ஆர்வமுள்ள அனைத்து பெற்றோர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இப்புத்தகத்தைப் பரிசளித்து உலகப் புத்தக அலமாரியின் கதவைத் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629507985571,"sku":null,"price":210.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Alamari_66e0b059-a352-49e1-a7d2-ea9ab9193a66.png?v=1777976884"},{"product_id":"டுடூம்-லைப்ரரி","title":"டுடூம் லைப்ரரி","description":"\u003cp\u003eமனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.மனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629537411235,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TUMDUM_f2c479fe-167a-4dff-8ddb-f9ea4513ab50.png?v=1777978859"},{"product_id":"புதிய-வீட்டைப்-பழக்குதல்-1","title":"புதிய வீட்டைப் பழக்குதல்","description":"\u003cp\u003eஇந்தக் கவிதைகள் எழுதப்பட்ட தருணங்கள், பெரும்பாலும் மௌனத்தில்தான் பிறந்தவை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மௌனம் என்பது வெறுமை அல்ல; அது சொல்ல முடியாத பல அனுபவங்களின் சேர்க்கை. சமூகத்தின்முன் சத்தமாகப் பேச முடியாத உணர்வுகள், வீட்டின் சுவர்களுக்குள் மட்டும் எதிரொலிக்கின்றன. அந்த எதிரொலிகளே, இக்கவிதைகளின் மொழியாக மாறின. இவை என் தனிப்பட்ட அனுபவங்களின் பதிவுகள் என்றாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் மௌனங்களின் பொதுப் பிம்பங்களாகவும் இருக்கும் என நம்புகிறேன்.\u003cbr\u003eஇந்தக் கவிதை அனுபவங்கள் எனது தனிப்பட்ட உணர்வுகள் என்றாலும், புதிய வீட்டின் வாசலில் தயக்கத்துடன் நிற்கும் எந்தப் பெண்ணுக்கும் இவை பரிச்சயமாகத் தோன்றினால், அதுவே இந்தக் கவிதைத் தொகுப்பின் வெற்றியாக நினைக்கிறேன். ஏனெனில், இந்தக் கவிதைகள் ஒரு வீட்டின் கதையல்ல. வீடுகளுக்கிடையே வளர்ந்த ஒரு பெண்ணின் அகவுலகின் சாட்சியம்.\u003cbr\u003eமனுஷி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47629564477603,"sku":null,"price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Puthiyaveedu.png?v=1777979567"},{"product_id":"லவ்-டேல்","title":"லவ் டேல்","description":"\u003cp\u003eகிரைம் நாவல்களின் வகைமைகள் தற்போது அருகிவிட்ட நிலையில் தொண்ணூறுகளின் பல்ப் ஃபிக்ஷன்களின் கனத்தைக் கொண்டு வந்திருக்கின்றது இந்நாவல்.\u003cbr\u003eஓர் அழகான அமைதியான மலைவாழிடம். அங்கே தொடர் கொலைகள் நடக்கின்றன. யாரும் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள்... அந்தக் கொலைகளின் பின்னணி என்ன? மர்மங்களின் திரை விலகியதா?\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47648916537507,"sku":null,"price":105.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/lovetaleWRAPPER.png?v=1778566855"},{"product_id":"தலைசிறந்த-கிராஃபிக்-நாவல்","title":"தலைசிறந்த கிராஃபிக் நாவல்","description":"\u003cp\u003eகிராஃபிக் நாவல்களைப் படிக்க விரும்புகின்றவர்களுக்கு இருக்கும் முதற்கட்ட சிக்கல் என்னவென்றால், எது சிறந்த கிராஃபிக் நாவல் என்று தெரியாமல் இருப்பதுதான். அதனாலேயே இந்தப் புத்தகத்தில் பதினேழு கிராஃபிக் நாவல்களைப் பற்றியும் பத்திற்கும் மேற்பட்ட மேஸ்ட்ரோக்களைப் பற்றியும் சிறு அறிமுகத்தைக் கொடுத்துள்ளேன். இந்த பதினேழில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் வெளியானவை என்பதால், இவற்றை சமகால கிராஃபிக் நாவல்களைப் பற்றிய முறையான அறிமுகம் என்றே சொல்லலாம்.\u003cbr\u003eஒரு படைப்பை நாம் அணுகும்போது படைப்பாளியையும் படைப்பையும் தனித்தே பார்க்க வேண்டும் என்ற பொதுக்கருத்து வழக்கில் இருந்தாலும், சில குறிப்பிட்ட படைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள படைப்பாளி யார், அவரது பின்புலம் என்ன என்பது போன்ற தகவல்கள் இருந்தால், அந்தப் படைப்பை இன்னமும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.\u003cbr\u003eஎன்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689664626851,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/THALAISIRANTHAGRAPHICNOVELPHOTO.png?v=1779355443"},{"product_id":"கிராஃபிக்-நாவல்-அறிந்துகொள்ள-வேண்டிய-ஆளுமைகள்","title":"கிராஃபிக் நாவல் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள்","description":"\u003cp\u003eகடந்த ஒரு தசம ஆண்டாக நான் சந்திக்கும் பத்தில் ஏழு பேர் கேட்கும் முதல் கேள்வியே இதுதான் காமிக்ஸுக்கும் கிராஃபிக் நாவலுக்கும் இடையே என்ன வித்தியாசம்?\u003cbr\u003eஇதற்காகவே இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது (வில் ஐஸ்னர்). முதலில் அதைப் படித்துவிடுங்கள். அப்போதுதான் கிராஃபிக் நாவலின் சிறப்பம்சம் புரியும்.\u003cbr\u003eஒரு படைப்பை நாம் அணுகும்போது படைப்பாளியையும் படைப்பையும் தனித்தே பார்க்க வேண்டும் என்ற பொதுக்கருத்து வழக்கில் இருந்தாலும், சில குறிப்பிட்ட படைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள படைப்பாளி யார், அவரது பின்புலம் என்ன என்பது போன்ற தகவல்கள் இருந்தால், அந்தப் படைப்பை இன்னமும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.\u003cbr\u003eகாமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல் உலகின் தலைசிறந்த ஆளுமைகளையும் படைப்புகளையும் அவர்களது இப்போதைய மிகச்சிறந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் எண்ணம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689710272675,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Graphic.png?v=1779358302"},{"product_id":"தலைசிறந்த-இந்திய-கிராஃபிக்-நவல்கள்","title":"தலைசிறந்த இந்திய கிராஃபிக் நவல்கள்","description":"\u003cp\u003eகிராஃபிக் நாவல்களைப் பற்றிப் பேசும்போது, அமெரிக்க, ஃப்ராங்கோ-பெல்ஜிய, ஐரோப்பிய, ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் மட்டும்தானா? இந்தியாவில் நல்ல கிராஃபிக் நாவல்கள் வரவில்லையா? என்ற கேள்வி எழுவதைத் தடுக்கவே இயலாது.\u003cbr\u003e1990களில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டு, அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை முன்வைத்து ஒரிஜித் சிங் எழுதிய (இந்தியாவின் முதல் கிராஃபிக் நாவல் என்று சொல்லப்படுகிற) A River of Storiesல் ஆரம்பித்து, 2000களின் பின்பகுதியில் நசீர் அஹமத் படைத்த Kashmir Pending வரையில் பல உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக் நாவல்கள் இந்தியாவில் வந்துள்ளன. அதேசமயம் இப்போதைய வாசகர்களுக்கு சமகாலத்திய நடையில் இருக்கும் இந்திய கிராஃபிக் நாவல்களைப் படிக்கவே பிடிக்கிறது.\u003cbr\u003eஅதனாலேயே, கடந்த பத்தாண்டுகளில் வெளியான 25 கிராஃபிக் நாவல்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை இப்போது முன்வைக்கிறேன். மாறிவரும் நமது வாசிப்பு சூழலில் கிராஃபிக் நாவல்களைப் பற்றிய ஆர்வம் அதிகரித்து வரும்வேளையில் நமது மண் சார்ந்த இந்த படைப்புகள் முதற்கட்ட ஆர்வத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.\u003cbr\u003eஎன்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும்? என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689719152803,"sku":null,"price":255.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/INDIYAGRAPHIC.png?v=1779359042"},{"product_id":"ஜப்பானிய-மங்கா-காமிக்ஸ்-அறிமுகங்களும்-ஆளுமைகளும்","title":"ஜப்பானிய மங்கா காமிக்ஸ் அறிமுகங்களும் ஆளுமைகளும்","description":"\u003cp\u003eகடந்த இரு தசம ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிவரும் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைத் தொடர்ச்சியாக படித்து வருபவன் என்ற வகையில் ஜப்பானிய காமிக்ஸ் புத்தகங்களான Manga-வின் மீது தீராக்காதல் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். பிரான்சின் பொந்-தெஸினி, இத்தாலியின் லிப்ரோ அ ஃபொமிட்டி, அமெரிக்காவின் கிராஃபிக் நாவல்கள் \u0026amp; OEM, கொரியாவின் மன்வா, இங்கிலாந்தின் காமிக்ஸ் என்று பல தரப்பட்ட புத்தகங்களுடனான அறிமுகம் ஆங்கில மொழியாக்கத்துடன் நடந்திருந்தாலும் உலக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜப்பானிய மங்காவின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\u003cbr\u003eபதின்ம வயதினர் முதல் 25 வயதுள்ள இளையோர் அனைவருமே மங்காக்களைத்தான் முதலில் படிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகுதான் காமிக்ஸ் \u0026amp; கிராஃபிக் நாவல்கள் என்று வாசிப்பின் பரப்பு அதிகரிக்கிறது. ஒரு திரைப்பட ஆந்தாலஜியில் மங்கா என்றால், அழகான பெண், கார்ட்டூன் என்று அறிமுகம் செய்தபோது, தமிழில் உறுதியாக இதைப்பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். இப்புத்தகத்தில் மங்கா பற்றிய அறிமுகம், டாப் 10 மங்கா காமிக்ஸ்கள், ஆளுமைகள் என்று மங்காவைப் படிக்க நினைப்பவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\u003cbr\u003eஎன்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689810280611,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/JAPAN.png?v=1779362102"},{"product_id":"சித்திரமும்-சரித்திரமும்-காமிக்ஸ்-உலகின்-திருப்பு-முனைகள்","title":"சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்","description":"\u003cp\u003eகடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்து காமிக்ஸ் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார், கிங் விஸ்வா. குறிப்பாக தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் குறித்தான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட பதிப்பாளர், எடிட்டர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து முழுமையான தகவல்களைத் தொகுத்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\u003cbr\u003eதமிழில் வெளியான அனைத்து சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல்கள், காமிக்ஸ் மற்றும் அச்சில் வராத காமிக்ஸ்கள் என்று 10,000 புத்தகங்களுக்கு மேலாக சேகரித்த இவர்தான் தமிழ் காமிக்ஸ் உலகின் மிகப்பெரிய கலெக்டர் என்றும் அறியப்படுகிறார்.\u003cbr\u003eஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் காமிக்ஸ் என்ற கலை ஏன் வளரவில்லை?\" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிங் விஸ்வா அளித்த பதில் \"டிம்பிள் கபாடியா\".\u003cbr\u003eஇன்றைய 2K Kidsகளுக்கு இது Cliok Bait தலைப்பாகத் தோன்றினாலும் உண்மை அதுதான். \"ராமரின் தாயாரின் பெயர் என்ன?” என்ற வினாடி-வினா கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்கத் தடுமாறியதில் இருந்துதான் இந்தியாவின் காமிக்ஸ் என்று அறியப்பட்ட அமர் சித்ர கதா துவங்கியது. இதுபோன்ற பல முக்கியமான திருப்புமுனைகளையும், இப்புத்தகத்தின் நோக்கம். நிகழாத தருணங்களையும் ஆவணப்படுத்துவதே\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689839509667,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SITHTHIRAM.png?v=1779364868"},{"product_id":"தமிழ்-சிறுவர்-இலக்கியம்-அறிந்துகொள்ள-வேண்டிய-ஆளுமைகள்","title":"தமிழ் சிறுவர் இலக்கியம் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள்","description":"\u003cp\u003eநான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.\u003cbr\u003eஎன்னுடைய வகுப்பாசிரியர் லண்டன் தேம்ஸ் நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு அந்த நதி எப்படி இருக்கும், அதன் அழகு, அதன் மேலே கட்டப்பட்டிருக்கும் பாலம், பின்னால் இருக்கும் பிக்-பென் கடிகாரம் என்று விவரமாகச் சொல்ல, ஆசிரியருக்கு ஆச்சரியம். “நீ லண்டன் சென்றிருக்கிறாயா?\" என்று கேட்க, நான் மஞ்சள் பூ மர்மம் என்ற முத்து காமிக்ஸ் கதையைச் சொல்லி அதில் இருக்கும் ஓவியங்களின் வாயிலாகத்தான் இவ்வளவும் தெரிய வந்தது என்று விளக்கினேன். அதன் பிறகு இன்னொரு முத்து காமிக்ஸ் கதையான \"சதிகாரர் சங்கம்\" வாயிலாக, இன்று ஒரு நாட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கி நேற்றைய தினத்தில் இன்னொரு நாட்டிற்கு சென்றடைவதைச் சொன்ன உடனே ஆசிரியருக்கே ஆச்சரியம்.\u003cbr\u003eஇப்படியாக காமிக்ஸ் வாசிப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. இந்தக் காமிக்ஸ் இதழ்களின் பதிப்பாசிரியரான முல்லை தங்கராசன் எனது முதல் ஆதர்ஸமாக மாறினார். ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் (எ) செல்லப்பன், சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி வாண்டுமாமா, அணில் அண்ணா என்று என்னுடைய இளம் பிராயம் மிகச்சிறந்த நினைவுகளுடன் கடக்க பலரும் உதவினர்.\u003cbr\u003eஅம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா என்று ஆரம்பித்து பின்னர் 1930களில் வந்த இதழ்கள் முதல் 1940களில் ஆரம்பித்த சிறுவர் இதழ்கள், 1950, 60, 70 என்று தொடர்ச்சியாக இதழ்களைச் சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். நம்மிடையே இருந்த மகத்தான ஆளுமைகளை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் இவர்களின் சாதனைகளை ஆவணப்படுத்தவும் இப்புத்தகம் உதவும் என்றே நம்புகிறேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689890300067,"sku":null,"price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SIRUVARILAKKIYAM.png?v=1779367534"},{"product_id":"தழல்","title":"தழல்","description":"\u003cp\u003eபெரும் மனச்சுமையுடன் வாழ்ந்துவரும் மார்ட்டினின் நடத்தையில் ஏற்படும் புதிர்கள் உருவாக்கும் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருப்பெறும் நாவல் 'தழல்'. குற்ற உணர்வு, பழியின் சுமை ஆகியவை வாழ்வின் நுட்பமான புதிர்களாக மாறும் விந்தையின் மீது 'தழல்' வெளிச்சம் பாய்ச்சுகிறது. பழியின் சுமை ஏன் இறக்க முடியாத சிலுவையாக மாறுகிறது என்ற கேள்விக்கான விடையை நாவலாசிரியர் தரவில்லை. வாசகர்கள் தங்களுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறார்.\u003cbr\u003eதீவிரமானதொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் தீவிரம் குன்றாமல் கையாண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தீவிரமான கேள்விகளையும் விசாரணைகளையும் விடைதேடும் பயணங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. இந்த முயற்சியே இந்த நாவலின் வலிமை.\u003cbr\u003eஅரவிந்தன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47689923690659,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/THAZHAL.png?v=1779368236"},{"product_id":"டொரினா","title":"டொரினா","description":"\u003cp\u003e.மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்து உருவாகியுள்ள புதிய, சமூக பண்பாட்டு வெளிகள் குறித்த பொதுப்புத்தியை இத்தொகுப்பின் சில கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. இப்புனைவு நிலத்தில் உருவாகிய கதைகள்தான் கார்த்திக் பாலசுப்ரமணியனின் அடையாளமாக இருக்கக்கூடும். இந்தப் புதிய நிலத்தின் நுண்மையான ஒடுக்குமுறை வடிவங்கள், மனிதத் துடிப்புகள், வாழ்வுச் சலனங்கள் போன்றவற்றைக் குறித்தும் பாதுகாவலர்கள், வாகன ஓட்டிகள், உணவுச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள் என தகவல் தொழில் நுட்பத்தின் புதிய தொழிலகங்களில் அலைவுறும் உதிரி மானுடத்தின் பார்வையில் ஐடி என்னும் வண்ணமிகு உலகை நோக்கியும் படரவிருக்கும் இவரின் படைப்புத் தளத்திற்கான விதைகள் இத்தொகுப்பில் முளைவிட்டிருக்கின்றன எனலாம்.\u003cbr\u003e- த.ராஜன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47695025635491,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/1.jpg?v=1779525429"},{"product_id":"கனவு-மிருகம்","title":"கனவு மிருகம்","description":"\u003cp\u003e.மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்து உருவாகியுள்ள புதிய, சமூக பண்பாட்டு வெளிகள் குறித்த பொதுப்புத்தியை இத்தொகுப்பின் சில கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. இப்புனைவு நிலத்தில் உருவாகிய கதைகள்தான் கார்த்திக் பாலசுப்ரமணியனின் அடையாளமாக இருக்கக்கூடும். இந்தப் புதிய நிலத்தின் நுண்மையான ஒடுக்குமுறை வடிவங்கள், மனிதத் துடிப்புகள், வாழ்வுச் சலனங்கள் போன்றவற்றைக் குறித்தும் பாதுகாவலர்கள், வாகன ஓட்டிகள், உணவுச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள் என தகவல் தொழில் நுட்பத்தின் புதிய தொழிலகங்களில் அலைவுறும் உதிரி மானுடத்தின் பார்வையில் ஐடி என்னும் வண்ணமிகு உலகை நோக்கியும் படரவிருக்கும் இவரின் படைப்புத் தளத்திற்கான விதைகள் இத்தொகுப்பில் முளைவிட்டிருக்கின்றன எனலாம்.\u003cbr\u003e- த.ராஜன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47695157821603,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KANAVU.png?v=1779532089"},{"product_id":"பட்டர்-பீ","title":"பட்டர் பீ","description":"\u003cp\u003eகுடில என்னையா கணக்கு மயிரு? நா என் மேலு வலிக்காக்கும் குடிக்கேன். சங்கடம் உள்ள வாழ்க்கை உனக்குண்டா? எங்க அய்யா இருந்தத அழிச்சான். நா ரெண்டு பொட்டப் பிள்ளய பெத்து கஷ்டப்படுகேன். எவனாச்சும் சொக்காரன், அவன் இவன்னு உபகாரம் உண்டா? எம் பைசா, எம் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு. பெயிண்ட் அடிச்சு இருக்கிறீரா? ஆக்கர் லோடு தூக்கும் போது மூட்ட ஒவ்வொண்ணும் நூறு கிலோ இருக்கும். எழவு இந்த நேரத்துல உன் உபதேசம் ஒன்னுத்துக்கும் புடுங்க லாயக்கு இல்ல. நீரு நல்லவனா இரய்யா. மனசுல ஆயிரம் விஷயம் கிடந்து கீலுக் கணக்கா கொதிக்கும். குடிச்சா கொஞ்சம் உறங்குவேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47699906756771,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/BUTTERB.png?v=1779696339"},{"product_id":"ஸெல்மா-சாண்டாவின்-அலமாரிப்-பூச்சிகள்","title":"ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்","description":"\u003cp\u003eமுன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர்.\u003cbr\u003eஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மிதப்பது அல்லது பிரதிகளில் இன்பம் காணுவது என நீளும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ் உறவாக தொடர முடிகிறது.\u003cbr\u003eகாலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன.\u003cbr\u003eஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.\u003cbr\u003e-யவனிகா ஸ்ரீராம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47699981303971,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SELMAA.png?v=1779703847"},{"product_id":"ட்ரங்கு-பெட்டிக்-கதைகள்","title":"ட்ரங்கு பெட்டிக் கதைகள்","description":"\u003cp\u003eஜீவ கரிகாலனின் கதைகள் ஒரு செஸ் விளையாட்டுக்கான முன்கணிப்புகள் கொண்டவையென துணிந்து சொல்லலாம். ட்ரங்கு பெட்டிக் கதைகளில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் உள்ளன. எந்தக் கதையும் ஒன்றையொன்று பதிலி செய்வதில்லை. படைப்பாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே தனித்துவமிக்க கதைகளைக் கொடுப்பதுதான். அதுவே ஒரு முழுத்தொகுப்பை வாசகனை அயர்ச்சியின்றி வாசிக்கச் செய்யும். அவ்வகையில் இத்தொகுப்பு தனித்துவக் கதைகளைக் கொண்டுள்ளது.\u003cbr\u003e- தூயன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47700050444451,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TRANGu.png?v=1779705447"},{"product_id":"ulagach-sinthanaiyil-kilai-parappiya-oru-maram","title":"உலகச் சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம்","description":"\u003cp\u003eஒரு மனிதன் தனது சொந்த ஊரை நினைவின் வழியே தேடும்போது, அது ஒரு புவியியல் பயணம் மட்டுமே. ஆனால், தமிழவனின் தன் வரலாறு அவரை ஓர் எழுத்தாளனாக, ஒரு மொழியுணர்வாளனாக, கலை இலக்கியத்தின் மீது கொண்ட ஓர் உலகப்பார்வையாளனாகக் காட்டுகிறது. அதற்கும் மேல் வாழ்ந்த வாழ்க்கையின் ஆழ்ந்த சாட்சியமாக இதனை அவர் எழுதும்போது இந்த நினைவு மீட்டல் புலன் கடந்த சிந்தனையின் அடுக்குகள் வழியாகச் செல்லும் அகப் பயணமாகிறது.\u003cbr\u003eஅரசியல், மதம், கோட்பாடு, மொழி, தேசியம், ஊர், மண்வாசனை, நம்பிக்கை, நினைவுகள் என இவை அனைத்தும் இங்கே ஒரு மரத்தின் கிளைகளாக விரிகின்றன.\u003cbr\u003eஇந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் அன்று கல்லூரி மாணவனாக கலந்துகொண்டபோது தமிழவனிடம் ஏற்பட்ட வாழ்க்கைத்தேடல் பின்னர் அவரை அகில உலக சிந்தனைகளைத் தமிழோடு சேர்த்து அறியும் பயணத்தில் வைக்கிறது. மார்க்சியம், திராவிடம், தொல்காப்பியம், லெவி ஸ்ட்ராஸ், என உலகத் தத்துவங்களையும் தான் பிறந்த பகுதியின் நாகரிகத்தையும் துருவிப்பார்க்கிறார்.\u003cbr\u003eஅவருடைய தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் வழி இப்பயணம் ஜம்பதுக்குக்கும் அதிகம் ஆண்டுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தமிழில் எழுதியும் அறிவுத்தளத்தில் சர்ச்சைகளில் பங்கெடுத்தும் வந்துள்ளார். போலந்து, அர்ஜென்டினா, பாரிஸ், ஜெர்மனி எனக் கருத்தரங்குகளில் இவரின் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன.\u003cbr\u003eதமிழவன், காலத்தையும் நிலவெளியையும் கடந்து, உலக இலக்கியத்தின் வேர்களோடு தமிழ்ச் சிந்தனையின் கிளைகளைப் பொருத்துகிறார். அவரது எழுத்து நினைவுக்கும் வரலாற்றுக்கும் இடையே நடக்கும் ஓர் அமைதியான தத்துவப் பேச்சாகும்.\u003cbr\u003eதனிப்பட்ட அனுபவம் எவ்வாறு பொதுவான உண்மையாய் மாறுகிறது என்பதைச் சாட்சியமாக்கும் சுயவரலாறு.\u003cbr\u003eதமிழவனின் எழுத்து இங்குத் தனிப்பட்ட நினைவுகளைக் கடந்து சென்று, மனித அனுபவத்தின் பரவலான உண்மையைத் தொட்டுவிடுகிறது.\u003cbr\u003eஉலக சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம் தமிழ்ச் சிந்தனையின் வேர்களையும் உலக இலக்கியத்தின் கிளைகளையும் இணைக்கும் ஒரு முக்கிய ஆவணம்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47700452868259,"sku":null,"price":349.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ULAGAM.png?v=1779719934"},{"product_id":"nakutti","title":"நாக்குட்டி","description":"\u003cp\u003eஆணின் தத்தளிப்பும், அவஸ்தையும், தனக்குள் திரள்வது இன்னதென்று சொல்லத்தெரியாத போதாமையும், கட்டுக்குள் இருந்துகொண்டே மிரளும் மூர்க்கமும் ஒருசேர நகுலனிடம் குவிய துளசியின் சிறு அசைவு போதுமானதாக இருக்கிறது. துளசி வகுக்கும் எல்லைக்கோட்டினை மீறத்துணிவதும், பின்வாங்குவதும், தோற்பதும், அவளிடமே இறைஞ்சுவதும்; மூச்சு முட்டும் இந்தக் காதலை விட்டுவிடலாமென்றால் காதலில் ஆதியுமில்லை அந்தியுமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து மறக்க வேண்டும்.\u003cbr\u003eஅதற்காகவேனும் காதல் கொள்வோம் என்கிறாள் துளசி.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47705903792291,"sku":null,"price":210.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/NAAKKUTTI.png?v=1779784340"},{"product_id":"moondraam-judi","title":"முன்றாம் ஜூடி","description":"\u003cp\u003eநம் மனதுக்கு நெருக்கமானவர்களின் பெயர் கொண்ட ஒருவரைச் சந்திக்கும்போது பெயருக்காகவே அவர் மீது ஒரு நேசம் பிறந்து விடுகிறது. பயணத்தில் தென்படும் ஒரு கடையின் பெயர்ப்பலகை நினைவுகளைக் கிளறி சிறு புன்னகையையோ துளி கண்ணீரையோ வரவழைத்து விடுகிறது. பிரபுவுக்கு ஜூடி என்ற பெயர் அப்படித்தான். அவன் ஜூடிகள் ஒவ்வொரு முறையும் அவனுடைய உலகத்தைத் தகர்த்து மீண்டும் புதிதாக எழுப்பி விட்டுப் போகிறார்கள். அப்படி அதிர வைத்த இரண்டு ஜூடிகளுக்குப் பிறகு சுவாரசியமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் அவன் வாழ்வில் முன்னறிவிப்பின்றி நுழைகிறாள் மூன்றாம் ஜூடி. அவள் அவனை என்ன செய்யக் காத்திருக்கிறாள்?\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47705927090339,"sku":null,"price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/MUNDRAMJUDI.png?v=1779785429"},{"product_id":"sundaravanam","title":"சுந்தரவனம்","description":"\u003cp\u003eஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்று தான் வாழும் உலகம். மற்றொன்று தான் வாழ விரும்பும் அல்லது அறியாமலேயே சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்ற உலகம். எல்லோருக்குமே சாத்தியம் என்றாலும் யாருக்கேனும்தான் தாயம் விழுவதைப் போல. தம்மால் கட்டுப்படுத்த முடியாத மாற்றம் ஒன்றை விழிப்புடன் எதிர்கொள்ள உயிர் மேவும் போராட்டமே இந்த நாவல்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47706017366179,"sku":null,"price":293.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SUNDHARAVANAM.png?v=1779788351"},{"product_id":"moongil","title":"மூங்கில்","description":"\u003cp\u003e“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ\u003cbr\u003eஎண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ\u003cbr\u003eபச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி\u003cbr\u003eசுட்ட சொல்லு வெலக்கு தாயி\u003cbr\u003eசுட்ட சொல்லு வெலக்கு தாயி\u003cbr\u003eபுத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே\u003cbr\u003eநல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்\u003cbr\u003eபச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்\u003cbr\u003eகல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ\u003cbr\u003eகுழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன்\u003cbr\u003eகருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா\u003cbr\u003eகொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு.”\u003cbr\u003e- சிறுகதையிலிருந்து\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47715095969955,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/MOONGIL.png?v=1779956870"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/frontpage.oembed?page=3","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}