{"title":"New Arrivals","description":null,"products":[{"product_id":"avalum-nanum2","title":"அவளும் நானும் 2","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e \n\u003cp\u003eபெண் குழந்தை மேல் பிரியத்தைக் கொட்டி வளர்க்கின்ற சமுதாயம் நம்முடையது. அதே நேரத்தில்,அந்தச் சிறுமி வளர, வளர அவளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை வைத்து பத்திரமாகப் போற்றி வளர்க்கச் செய்வதும் சமூக அத்துக்களை கரிசனத்தோடு விதித்து நடப்பாக்குவதும் அந்தச் சூழலே.\u003cbr\u003e\u003cbr\u003eஸ்ரீரங்கம் என்ற சிறு நகரில் எட்டு வயதுப் பேத்தியோடு வசிக்கும் அம்மம்மா  கனிவையும் கண்டிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து அவளுக்குத் தரும் தன் வரலாற்றுக் கதையாடல் முழுக்க சின்னஞ்சிறு உரையாடல்கள் வடிவில் நேர்த்தியாக சித்தரிக்கிறார் ரம்யா. A narrative of carefully arranged staccato sentences.\u003cbr\u003e\u003cbr\u003eஉபதேசிக்காத, கண்டிக்காத, குமைய வைக்காத, படாடோபமில்லாத பனுவலாக ‘அவளும் நானும்’ நிறைவான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. இரண்டுவிதக் கதையாடல்களில் ரெட்டைக் குதிரையேறி வெற்றிகரமாக சஞ்சரிக்கிறார் ரம்யா. சுஜாதா பாரம்பரியத்தில் இன்னொரு சுவாரசியமான ஸ்ரீரங்கத்து கதைசொல்லி.\u003c\/p\u003e\n\u003cp\u003e- இரா. முருகன்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47530978115747,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-07at12.49.05PM.jpg?v=1775546415"},{"product_id":"21stcentfilmlang","title":"21 ஆம் நூற்றாண்டின் திரைமொழி","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(255, 42, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eஒருபக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்க்கும் பார்வையாளனாகவும், மறுபக்கம் திரைப்படம் எடுக்கவிருக்கும் மனதுடையவனாகவும் என இவை என்னுள் இருவேறு துருவங்களாக தங்களின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கின்றனர். அவை  என்னுள் சுழலும் போக்கை ஒன்றாக்கிட விரும்பியதன் மூலமே இதன் அடிப்படையாக  எடுத்துக்கொள்ளலாம். திரைமொழியின் மாற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இவை. அதனால் என்னவோ சமூக வரலாறும், திரை நுட்பமும், மெய்யியலும் தானாக வந்து அமர்ந்தது.  கட்டுரைகளில் அவை  தேவையில்லாத ஒரு வரியையும் பேசி இருக்காது. படங்களின்   கதையை  அது விஸ்தாரப்படுத்துவதைக்  காணமுடியும். \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eகலை உனக்கு விருப்பட்ட திசைகளில் திரும்பும் ஆகையால் மகிழாதே, அது உன் எதிரிக்கும் பொருந்தும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47824900522147,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/thiraimozhi.jpg?v=1782911797"},{"product_id":"ligat","title":"லீகாட்","description":"\u003cp\u003eஇது ம.நவீனின் நான்காவது நாவல்.\u003cbr\u003e\u003cbr\u003eபுனைவின் வழியாக யட்சியைத் தெய்வமாக்கவேண்டியவன் தானே ஒரு பேயாக மாறி அர்த்தமற்ற வாழ்வை வாழ்ந்து முடிக்கிறான். அவ்வாறு என்னை இருபத்து ஐந்துவருடங்களாகப் பின் தொடர்ந்த யட்சிக்கு நியாாயம் செய்துள்ளதாகக் கருதுகிறேன். அவளை தெய்வமாக்கியுள்ளதில் மகிழ்கிறேன்.\u003cbr\u003e\u003cbr\u003e- நவீனின் முன்னுரையிலிருந்து\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Paperback \/ Literature \/ TAM- Tamil","offer_id":47918589149347,"sku":null,"price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ligad_24e3543e-c3a4-4a5f-88a9-16341dc405ae.png?v=1784769540"},{"product_id":"ponni-1","title":"பொன்னி","description":"\u003cp style=\"text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(239, 191, 31);\"\u003e\u003cstrong\u003e\u003cem\u003eபாகம் 1 : இரணியசேனை\u003c\/em\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(18, 18, 17);\"\u003e\u003cstrong\u003e\u003cem\u003eமலேசிய ரப்பர் தோட்டங்கள், பர்மாவின் அகதிகள், மலையகத்தின் தேயிலைத் தோட்ட அடிமைகள், மரண ரயில் பாதைகள் என்று உயிரைக் கொடுத்த பல்லாயிரம் தமிழர்களுடைய வரலாற்றின் கருப்பு பக்கங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் அனைத்திலும் விடுபட்டுப் போன ஓர் இருண்ட சரித்திரம் உண்டு.\u003cbr\u003e15ஆம் நூற்றாண்டு வரை உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தங்கம் யாரால் எப்படி வெட்டி எடுக்கப்பட்டது? அவர்களைக் குறித்து ஏன் இலக்கியங்கள் பாடவில்லை?\u003cbr\u003eபிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அப்படி அடிமைகளைப் போல் நடத்தப்பட்டு மண்ணுக்கடியில் போன தமிழர்களின் குரல்களை இந்த நாவல் சத்தமாகப் பதிவு செய்கிறது. ஆனால் அவர்களுக்கு முன்பாக யார்?\u003cbr\u003eமுற்காலச் சோழர் காலத்தில் தொடங்கி, பிரித்தானிய காலம், தற்காலத்தின் கார்ப்பரேட் யுகம் வரை நீளும் தங்கத்தின் பாய்ச்சலையும் அது பலிகொண்ட மனிதர்களையும் இந்த நாவல் பேசுகிறது.\u003cbr\u003eகேஜிஎப் போன்ற படங்களுக்கு முன்பே வெளிவந்த இந்த நாவலில் அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அடிநாதம் இருப்பதை வாசகர்கள் உணர முடியும்.\u003c\/em\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47976023523491,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/PonniWrapper.png?v=1786347447"},{"product_id":"monsieur-van-gogh","title":"மெஸ்யூர் வான்கா (முன் பதிவுச்சலுகை)","description":"\u003cp\u003eமுதல் பதிப்பு முடிந்துவிட்டது..  இரண்டாம் பதிப்பின் முன்பதிவு அறிவிப்பு. நூல்கள் செப்டம்பர் மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்..\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eLust for Life எனும் பெயரில் இர்விங் ஸ்டோன் எழுதிய வான்காவின் வாழ்க்கை வரலாற்று நாவல். தமிழில் எளிய நடையில், சிறப்பான வடிவமைப்பில் வெளிவருகிறது..\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48039754891427,"sku":null,"price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Vangogh.png?v=1787657599"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/new-arrivals.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}