{"title":"short stories","description":"","products":[{"product_id":"mailo","title":"மைலோ","description":"\u003cp\u003eஉமா கதிரின் முந்தைய தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'களப எயிறு' கதையில் வரும் யானையின் பெயர், 'பத்தி ஹர்ன்'. இதற்கு தாய்லாந்து மொழியில் 'அற்புதம்' என்று பொருள். யானையின் பேராகிருதி போன்றே, நிலமதிர அசைந்தாடி நடக்கும்போது அனாயாசமாக துதிக்கை வீசும் கனதோரணை போன்றே, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அந்தக் கதை உருவாகியிருக்கிறது. அதையும் ஒரு 'பத்தி ஹர்ன்' எனலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பின் கதைகளை முன்னர் வாசிக்கும்போதே, அவற்றின் பெருந்தச்ச அம்சங்களை இனங்கண்ட ஆனந்தம் எனக்கு. இப்போது மீண்டும் வாசிக்கும்போதும் உமா கதிர் நிறைவைக் கொண்டுவருகிறார். இந்த வெளிப்பாடுகளின் வீழ்படிவாக மனதில் ஒளிரும் அவரது கலா ஆளுமை, இவற்றைப் போன்ற இன்னும் பலவற்றுக்காக காத்திருக்க அறிவுறுத்துகிறது.\u003cbr\u003e- யூமா வாசுகி\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47488439255203,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/front.jpg?v=1774010965"},{"product_id":"sorpozhivugal","title":"சொற்பொழிவுகள்","description":"\u003cp\u003eசொற்பொழிவுகள்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506744803491,"sku":null,"price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Sorpozhivukalwrapperfront.jpg?v=1774438988"},{"product_id":"vanaspathi","title":"வனஸ்பதி","description":"\u003cp\u003eவனஸ்பதி\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47506757877923,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Vanaspathiwrapper.jpg?v=1774439892"},{"product_id":"ambu-padukkai","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47531144118435,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/ampupadukkai.png?v=1775393980"},{"product_id":"kannatti","title":"கண்ணாட்டி","description":"\u003cp\u003eபொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால்,  ‘groundlings of the pit’ தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள். \u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47604155383971,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/WhatsAppImage2026-04-26at11.57.21.jpg?v=1777190207"},{"product_id":"டொரினா","title":"டொரினா","description":"\u003cp\u003e.மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்து உருவாகியுள்ள புதிய, சமூக பண்பாட்டு வெளிகள் குறித்த பொதுப்புத்தியை இத்தொகுப்பின் சில கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. இப்புனைவு நிலத்தில் உருவாகிய கதைகள்தான் கார்த்திக் பாலசுப்ரமணியனின் அடையாளமாக இருக்கக்கூடும். இந்தப் புதிய நிலத்தின் நுண்மையான ஒடுக்குமுறை வடிவங்கள், மனிதத் துடிப்புகள், வாழ்வுச் சலனங்கள் போன்றவற்றைக் குறித்தும் பாதுகாவலர்கள், வாகன ஓட்டிகள், உணவுச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள் என தகவல் தொழில் நுட்பத்தின் புதிய தொழிலகங்களில் அலைவுறும் உதிரி மானுடத்தின் பார்வையில் ஐடி என்னும் வண்ணமிகு உலகை நோக்கியும் படரவிருக்கும் இவரின் படைப்புத் தளத்திற்கான விதைகள் இத்தொகுப்பில் முளைவிட்டிருக்கின்றன எனலாம்.\u003cbr\u003e- த.ராஜன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47695025635491,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/1.jpg?v=1779525429"},{"product_id":"கனவு-மிருகம்","title":"கனவு மிருகம்","description":"\u003cp\u003e.மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்து உருவாகியுள்ள புதிய, சமூக பண்பாட்டு வெளிகள் குறித்த பொதுப்புத்தியை இத்தொகுப்பின் சில கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. இப்புனைவு நிலத்தில் உருவாகிய கதைகள்தான் கார்த்திக் பாலசுப்ரமணியனின் அடையாளமாக இருக்கக்கூடும். இந்தப் புதிய நிலத்தின் நுண்மையான ஒடுக்குமுறை வடிவங்கள், மனிதத் துடிப்புகள், வாழ்வுச் சலனங்கள் போன்றவற்றைக் குறித்தும் பாதுகாவலர்கள், வாகன ஓட்டிகள், உணவுச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள் என தகவல் தொழில் நுட்பத்தின் புதிய தொழிலகங்களில் அலைவுறும் உதிரி மானுடத்தின் பார்வையில் ஐடி என்னும் வண்ணமிகு உலகை நோக்கியும் படரவிருக்கும் இவரின் படைப்புத் தளத்திற்கான விதைகள் இத்தொகுப்பில் முளைவிட்டிருக்கின்றன எனலாம்.\u003cbr\u003e- த.ராஜன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47695157821603,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KANAVU.png?v=1779532089"},{"product_id":"பட்டர்-பீ","title":"பட்டர் பீ","description":"\u003cp\u003eகுடில என்னையா கணக்கு மயிரு? நா என் மேலு வலிக்காக்கும் குடிக்கேன். சங்கடம் உள்ள வாழ்க்கை உனக்குண்டா? எங்க அய்யா இருந்தத அழிச்சான். நா ரெண்டு பொட்டப் பிள்ளய பெத்து கஷ்டப்படுகேன். எவனாச்சும் சொக்காரன், அவன் இவன்னு உபகாரம் உண்டா? எம் பைசா, எம் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு. பெயிண்ட் அடிச்சு இருக்கிறீரா? ஆக்கர் லோடு தூக்கும் போது மூட்ட ஒவ்வொண்ணும் நூறு கிலோ இருக்கும். எழவு இந்த நேரத்துல உன் உபதேசம் ஒன்னுத்துக்கும் புடுங்க லாயக்கு இல்ல. நீரு நல்லவனா இரய்யா. மனசுல ஆயிரம் விஷயம் கிடந்து கீலுக் கணக்கா கொதிக்கும். குடிச்சா கொஞ்சம் உறங்குவேன்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47699906756771,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/BUTTERB.png?v=1779696339"},{"product_id":"ஸெல்மா-சாண்டாவின்-அலமாரிப்-பூச்சிகள்","title":"ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்","description":"\u003cp\u003eமுன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர்.\u003cbr\u003eஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மிதப்பது அல்லது பிரதிகளில் இன்பம் காணுவது என நீளும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ் உறவாக தொடர முடிகிறது.\u003cbr\u003eகாலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன.\u003cbr\u003eஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.\u003cbr\u003e-யவனிகா ஸ்ரீராம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47699981303971,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SELMAA.png?v=1779703847"},{"product_id":"ட்ரங்கு-பெட்டிக்-கதைகள்","title":"ட்ரங்கு பெட்டிக் கதைகள்","description":"\u003cp\u003eஜீவ கரிகாலனின் கதைகள் ஒரு செஸ் விளையாட்டுக்கான முன்கணிப்புகள் கொண்டவையென துணிந்து சொல்லலாம். ட்ரங்கு பெட்டிக் கதைகளில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் உள்ளன. எந்தக் கதையும் ஒன்றையொன்று பதிலி செய்வதில்லை. படைப்பாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே தனித்துவமிக்க கதைகளைக் கொடுப்பதுதான். அதுவே ஒரு முழுத்தொகுப்பை வாசகனை அயர்ச்சியின்றி வாசிக்கச் செய்யும். அவ்வகையில் இத்தொகுப்பு தனித்துவக் கதைகளைக் கொண்டுள்ளது.\u003cbr\u003e- தூயன்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47700050444451,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/TRANGu.png?v=1779705447"},{"product_id":"seemurk","title":"சீமுர்க்","description":"\u003cp\u003eகாலந்தோறும் கதைகள் தீர்வதில்லை. வேறு வேறு மனிதர்களின் கதைகள் சொல்லப்பட்ட வண்ணமிருக்கின்றன. சில தருணங்களில் சான்றாதாரங்களுடன் அவை வரலாறாகப் பரிணமிக்கின்றன. அவ்வரலாற்றில் பெரும்பாலான தருணங்களில் பலதரப்பட்ட மனிதர்களின் குறிப்பிடப்பட வேண்டிய வாழ்க்கை கைவிடப்படுகிறது. இலக்கியம் அவர்களின் மீது பாய்ச்சும் சிறிய வெளிச்சம் ஆசுவாசமளிக்கிறது. அதிகாரத்தின் பிடியில் மறைக்கப்படும் எளிய மனிதர்களின் அன்றாடங்கள் புனைவாக்கப்படுவதோடு அல்லாமல் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன. அதிலும் பின் நவினத்துவ இலக்கியங்கள் அதிகாரத்தால் எழுதப்படும் வரலாறுகளைப் பகடி செய்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாலசுப்ரமணியம் பொன்ராஜின், சீமுர்க் சிறுகதைத் தொகுப்பு சமகாலத்திலிருந்து வரலாற்றைப் பரிசீலிக்கும் பார்வையைப் பிரதானப்படுத்தி புனைவுகளைக் கட்டமைக்கிறது. காலத்தின் ஊடே கதைகளாகச் சொல்லப்பட்ட வரலாறுகளும், அதன்வழி கூறப்பட்ட கதைகளும் கண்டுக்கொள்ளப்படாமல் வெறும் காட்சிப்பொருட்களாக அதன் சின்னங்கள் எஞ்சுவதை சிறுகதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத காரணத்தால் அல்லது வரலாற்றை அறிந்துகொள்வதில் சமகாலம் காட்டும் அலட்சியத்தால் தனித்த அடையாளங்களாக சமகாலம் உருமாற மறுக்கின்றன. இன்றிருக்கும் பண்பாட்டு அம்சங்கள் வரலாற்றுச் சின்னங்களாக மாறுமா எனும் கேள்வி பதிலற்றுப் போகின்றது.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47710419189923,"sku":"10","price":162.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/IMG-20260527-WA0047.jpg?v=1779895328"},{"product_id":"moongil","title":"மூங்கில்","description":"\u003cp\u003e“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ\u003cbr\u003eஎண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ\u003cbr\u003eபச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி\u003cbr\u003eசுட்ட சொல்லு வெலக்கு தாயி\u003cbr\u003eசுட்ட சொல்லு வெலக்கு தாயி\u003cbr\u003eபுத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே\u003cbr\u003eநல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்\u003cbr\u003eபச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்\u003cbr\u003eகல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ\u003cbr\u003eகுழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன்\u003cbr\u003eகருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா\u003cbr\u003eகொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு.”\u003cbr\u003e- சிறுகதையிலிருந்து\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47715095969955,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/MOONGIL.png?v=1779956870"},{"product_id":"muppogam","title":"முப்போகம்","description":"\u003cp\u003eநம் நிலம் -  எல்லா மாற்றங்களையும் தாண்டி எந்த காலத்திலுமே சாதியத்தை வேரோடு பற்றியிருக்கிறது என்பதைப் பேசும் இக்கதை, கூர்மையான பெண் கதாப்பாத்திரங்கள் வழி ஒரு தட்டையான சமூகத்தை உட்புறம் நின்று அவலத்தை உணரும்படியான வாசிப்பைக் கோரும் நாவல் இது.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47715197878435,"sku":null,"price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/MUPPOGAM.png?v=1779963389"},{"product_id":"kanavai-pathai","title":"கணவாய் பாதை","description":"\u003cp style=\"text-align: left;\"\u003eஇன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குள் அவர்கள் அதை அடைந்து விடுவார்கள். மகிழ்ச்சி அவள் மனதில் பார்வதி நதி போல் துள்ளியோடியது. என்னாலும் சிகரங்களை தொடமுடியும் என்று எனக்கும் இந்த உலகத்திற்கும் உரக்கச் சொல்லும் நேரம் அதிக தொலைவில் இல்லை. அவள் அவனைப் பார்த்து சிரித்தாள். அவனும் புன்னகை புரிந்தான். இருவர் முகத்திலும் சாதனையின் ஒளி பரவியிருந்தது. அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது....\u003cbr\u003e--நூலிலிருந்து\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":47715261415587,"sku":null,"price":149.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KANAVAAYPAATHAI.png?v=1779965141"},{"product_id":"dhuradhirshtam-piditha-kappalin-kathai","title":"துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை","description":"\u003cp\u003eஇறுதியாக ஒரு துப்பாக்கி சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.\u003cbr\u003eநான்காவது புல்லட் என்னுடைய நெற்றியின் வலது ஒரத்தில் இருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற மூன்று புல்லட்டுகளை துரத்துகிறது. அது நெற்றியின் இடது வெளிப்புறத்தில் இருந்து ஒட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலைநீட்டிய வரை ஒரு நெடுங்கால பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்தது மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது.\u003cbr\u003e-நூலிலிருந்து\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47719118405795,"sku":null,"price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Dhuradhirshtampidithakappalinkathai.png?v=1780051835"},{"product_id":"kirumi-kathaigal","title":"கிருமி கதைகள்","description":"\u003cp\u003eபடைப்பாளிகள் நோயையும் கிருமியையும் உருவகங்களாகச் சித்தரித்திருக்கின்றனர். மனித மனதின் வக்கிரங்களின் புறத்\u003cbr\u003eதோற்றமாகவே உருவகித்திருக்கின்றனர் அல்லது கிருமியை வாழத் துடிக்கும் ஒரு உயிரியாகக் கருதியுள்ளனர். ஒரு கிருமியின் அகத்திற்குள்ளும் ஊடுருவும் மனம் படைத்தவர்களாகத் தலை சிறந்த இலக்கியவாதிகள் வெளிப்பட்டிருக்கின்றனர்.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47724362793123,"sku":null,"price":205.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KIRUMIKATHAIKAL.png?v=1780301700"},{"product_id":"argadas-nagaram","title":"ஆர்கடாஸ் நகரம்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பில் உள்ள கதைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று, மனித உளவியலில் மேற்சொன்ன மாற்றங்கள் நிகழ்த்தப்போகும் குழப்பங்களைச் சொல்லும் கதைகள். அவற்றை எதிர்கால மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? இரண்டு, மனிதர்களின் தவறான அரசியல் அறிவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றது? அறிவியலுடன் எந்த வகையான அரசியல் இணைந்தால் மனிதர்களுக்கு நன்மை? மூன்று, தற்கால மனிதர்களின் உளவியல்\/உணர்வுசார் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் எடுபடுமா?\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47732351107235,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/AARKATAASNAGARAM.png?v=1780472299"},{"product_id":"kadavulum-candyum","title":"கடவுளும் கேண்டியும்","description":"\u003cp\u003eரொம்ப கறார் பேர்வழியா இருக்கும் போலிருக்கிறதே இந்த தட்டச்சுக் குரங்கு. கதைன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். எல்லாத்துலேயும் தர்க்கத்தை எதிர்பார்த்தா உருப்பட்டாப்லதான். நான்கூட ஒரு காலத்துல ஒரு கதைய தெரியாத்தனமா ஆரம்பிச்சுட்டேன். அது பாட்டுக்குத் திரௌபதி வஸ்திரமாட்டம் என்ன நீண்டுண்டே போயிடுத்து. இன்னும் முடிஞ்ச பாடில்ல! சில விமரிசகர்கள் இதுவரை எழுதியதைப் படிச்சிட்டு நிறைய இடங்களில் தர்க்கம் உதைக்கிறது என்று குறைபட்டுக் கொண்டார்கள். என்னத்தை சொல்ல, நான் அறிவியல் தேற்றத்தையா இயற்றுகிறேன். எல்லாம் பூட்டு சாவி போலப் பொருந்திப் போறதுக்கு. தர்க்கமே ஒரு புனைவு, அதைக்கொண்டு நிஜத்தை அளக்கப் பார்த்தா அபத்தங்கள்தான் உருவாகும். உன்னுடைய மெய்நிதர்சனம் போல.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47732485193891,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/KADAVULUMCANDYUM.png?v=1780473543"}],"url":"https:\/\/yaavarum.com\/collections\/short-stories.oembed","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}