EIA 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவு தமிழில்

4

தமிழ்ச் சமூகத்திற்கு வணக்கம்

கொரோனா ஊரடங்கில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நபரும் எதிர்பாராத, சமாளிக்க இயலாத நெருக்கடிகள் சூழந்துகொண்டிருக்கின்ற இந்தப் பேரிடர் சூழலில், இந்திய ஒன்றிய அரசு பல சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்ற தீவிரமாக முனைப்புக் காட்டிவருகிறது. அதில் அச்சமிக்கச் சட்டமாகப் பல சூழலியல் இயற்கை ஆர்வலர்களும், மாணவர்களும், பொது மக்களும் எதிர்க்கும் திட்டம் – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 (வரைவு). சிலர் தேவையற்ற அச்சமென்கிறார்கள், சிலர் நம்புங்கள் என்கிறார்கள், சிலர் நாங்கள் பலர் சிலரில்லை என்றும் திருத்துகிறார்கள்.

120 கோடிக்கும் மேற்பட்டோர் வாழும் இந்திய ஒன்றியத்தில் மட்டும் 19, 500 மொழிகளும் வட்டார மொழிகளும் இருப்பதாக 2018-இல் வந்த கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையிலுள்ள 22 அலுவல் மொழிகளிலாவது மொழிபெயர்க்காமல் மக்களிடம் கருத்து எப்படி வாங்கிட முடியும் என்கிற ஆதாரக் கேள்விக்கு நீதிமன்றம் வழியாகக் கிடைத்திருக்கும் அவகாசம் மிகச்சிறிய இடைவெளி தான், ஆகஸ்ட் 11!

மக்களால் உருவாகும் அமைப்புதான் அரசு என்கிறது அரசியல் சாசனம். மக்களாகிய நாமே நமக்காக அதைச் செய்வோம் என்கிற உந்துதலில் நண்பர்களின் ஒத்துழைப்போடு இந்த மொழிபெயர்ப்பைத் தொடங்கினோம். மொழிபெய்ர்ப்பு அத்தனை எளிதான பணி அல்ல. அதுவும் இத்தனை குறுகிய இடைவெளியில், அதை விடக் கடினம் இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்படும் துறை சார்ந்த கலைச்சொற்கள். வேதியல், உயிரியல், சூழலியல், இயற்பியல், சட்டம் என எல்லா வகைப் பயிற்சியும் தேவைப்படுகிறது.

முகநூலில் இதற்கான அழைப்பை விடுத்ததும் முன்வந்த நபர்கள் பெரும்பாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட பணியை முடித்து விட்டார்கள். பணியை அரும்பாடுபட்டுச் செய்தவர்கள், பிழை திருத்தி, தரத்தை மேம்படுத்தி, மேலும் கூர்தீட்டி மக்களுக்குச் சமர்ப்பித்தாலும், இதில் நிறையப் பிழைகள் இருக்கலாம், மேலும் திருத்தங்கள் தேவைப்படலாம், மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் குறைந்த அவகாசத்தில் மக்களுக்கு இது கையில் போய்ச் சேர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நாங்கள் வெளியிடுகிறோம். இதை மேம்படுத்த விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இதன் பிரதியைப் பெற்றுக்கொண்டு மேம்படுத்தலாம். இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது. இது மக்களின் மொழிபெயர்ப்பு, பொதுவெளியில் வெளியிடப்பட்ட பதிப்பு, அதனால் முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள். எங்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் (விவரங்கள் கடைசிப் பக்கத்தில்) அனைவருக்கும் உளமாற நன்றி கூறுகிறோம்.

இது மக்களின் மொழிபெயர்ப்பு, மக்களின் பிரதி. மக்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்..

EIA-2020-draft-tamil-public-translation

இப்படிக்கு

ஒருங்கிணைப்பாளர் குழு

4 COMMENTS

  1. கண்டிப்பாக கருத்துரு உருவாக்கித்
    வெளியிட வேண்டும்

  2. கண்டிப்பாக மறுகருத்துரு உருவாக்க
    வேண்டும் மத்திய அரசின் வெளியிடும் எந்த ஒரு அறிக்கையும்
    மனித குலத்திற்கு மற்றாகவே உள்ளது

  3. இந்த.EIA விற்கு என்னுடைய எதிர்பை பதிவிடுகிரேன்

  4. காட்டை அழிக்கும் விவசாயத்தை சீரழிக்கும் இயற்க்கையை சீரழிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் எங்கள் ஆதரவுகிடையாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here