{"product_id":"பொன்னி-2","title":"பொன்னி 2","description":"\u003cp\u003eதங்கம் என்பது வெறும் ஆபரணங்களுக்கான உலோகம் அல்ல.  அது கால, தேச எல்லைகளைத் தாண்டிய ஓர் அதிகாரம். அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற ஒருபுறம் உலகின் உச்ச வல்லாதிக்கமும், மறுபுறம் அதை எதிர்க்கும் மூன்றாம் உலக நாடொன்றின் தவிர்க்க முடியாத எழுவிசையும் மோதிக்கொள்ளும் களமே இந்நாவல். \u003c\/p\u003e\n\u003cp\u003eவணிக, அரசியல் அதிகாரங்களில் எதிரெதிர் துருவங்கள் தமக்குக் கீழேயுள்ளவர்களை நினைப்பதில்லை. அந்தப் போட்டியில் எளியவர்களின் பக்கம் நிற்கும் பொன்னி ஒரு விதிவிலக்கு. பொன்னி, எலினா, வைதேகி என்று வலிமையான பெண்களால் ஆளப்படும் உலகைக் காட்டும் மக்களுக்கான இலக்கியம் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமகாலத்தில் நிகழும் அசாதாரணமான சம்பவங்களை, பின்காலனித்துவ உலகின் வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டே உருவாக்கி, ஸ்க்ரோல் செய்துகொண்டிருக்கும் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும் பணியைச் செவ்வனே செய்கிறார் நாவலாசிரியர். கதையின் சில நிகழ்வுகளை இணையத்தில் தேடினால் ஆச்சரியங்கள் காத்திருக்கும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஈராயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த வேட்டையில் எத்தனையோ பலியாடுகள், காவுகள், விபத்துகள், விபரீதங்கள். அவை அனைத்தையும் கடந்தும் நீளும் இந்தத் தேடுதலின் நடுவே, எங்கிருந்தோ பதியமிட்டு வைத்த ஒரு பூச்செடியை நட்டுவைக்க ஓர் எழுத்தாளனால் மட்டுமே முடியும். வாசகருக்குக் கிடைக்கும் அந்த நிறைவுதான் இதன் வெற்றி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு வரலாற்று நாவல், அரசர்களின் வரலாற்றையும் பராக்கிரமங்களையும் துதிப்பதிலிருந்து விலகி, மக்களைப் பாடுபொருளாகவும் அவர்களையே தலைவர்களாகவும் சித்தரிக்கும்போது அது வேறொரு உயரத்தை அடைகிறது. அத்தகைய படைப்புகள் காலத்தைத் தாண்டி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதற்கு சிலம்பிலிருந்தே நம்மால் உதாரணம் கொள்ள முடியும்.\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":50537724903587,"sku":null,"price":590.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/Capture.png?v=1790579802","url":"https:\/\/yaavarum.com\/products\/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-2","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}