{"product_id":"aan-ezhuththu-pen-ezhuththu-aapenneluththu","title":"ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து","description":"\u003cp\u003eஅகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. 'மகனே, கைப்பிடியளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை; இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை. மூப்பு இல்லை எனவே மரணமில்லை. இந்தக் கைப்பிடியளவு கதைகளால் உன்னுள் ஒரு காட்டையும் ஒரு கடலையும் ஆக்கிக்கொள். காடு உனது அகவுலகின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும்; கடல் உனது புறவுலகின் புதிய நிலங்களையும் அவற்றின் மனிதர்களையும் அறிமுகம் செய்யும். நீ வளரவளர காடும் கடலும் வளரும். காட்டிலுள்ள எறும்பு முதல் யானைவரை அனைத்தையும் உனது முகச் சாயலில் வரைந்தும் வடித்தும் வைத்துக்கொள்; உனக்கு இடும்பை இல்லை. கடல்வழி விரியும் நில மக்களுக்கு முன் ஒரு நிலைக்கண்ணாடியாய் நில்; உனக்கு எதிரி இல்லை. தூங்கு மகனே தூங்கு; தூக்கம் கனவுகளின் விளைநிலம். கனவுகள் உனக்கு நான் சொல்லாதக் கதைகளைச் சொல்லும்.'\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48101865816227,"sku":null,"price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/11f628c88a152258d57af5a849223655.png?v=1788859133","url":"https:\/\/yaavarum.com\/products\/aan-ezhuththu-pen-ezhuththu-aapenneluththu","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}