{"product_id":"nilavum-aaru-anaakkalum","title":"நிலவும் ஆறு அணாக்களும்","description":"\u003cp\u003eஓவியர் பால்கோகினின் அசாதாரணமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த நாவல். ஆனால் முழுவதும் அவரது வாழ்க்கையே ஒட்டிச்சென்ற நாவல் அல்ல. இந்த நாவலில் பால் கோகின் தவிர அந்தக் காலத்தில் வாழ்ந்த வேறுசில எழுத்தாளர்களும் வேறு பெயர்களில் வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த நூற்றாண்டில் Marla vargas losaaவால் எழுதப்பட்ட The way to paradise நாவலே பால்கோகினின் வாழ்க்கையை ஒப்பீட்டளவில் துல்லியமாக ஒட்டிச் செல்வது.\u003cbr\u003eஆனால் மாமின் நாவல் லோசா எழுதிய நாவலிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட கோணமுடையது. லோசா நாவல் பால்கோகினின் பாட்டியும் முதல் பெண்ணியவாதிகளில் ஒருவருமான mary wollancraftக்கும் இருந்த முரண்பட்ட நடத்தைகளை, வாழ்க்கைகளை மையமாகக் கொண்டது என்று சொன்னால் மாமின் நாவல் ஒரு கலைஞனின் படைப்புத்திறன், ஆளுமை அவற்றில் ஒளிந்திருக்கும் மர்மம் பற்றியது.\u003cbr\u003eஒப்பீட்டுக்காகவும் மறுவாசிப்பு அனுபவத்திற்காகவும் திரும்பவும் மாமின் இந்த நூலை ஆங்கிலத்தில் நான் படிக்க ஆரம்பித்து பிறகு பத்மஜா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பையே தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். முதல்முதலாக இந்த நாவலை ஆங்கிலத்தில் நான் படித்தபோது ஏற்பட்ட அனுபவம் மங்கவில்லை என்பதோடு மேம்படவும் செய்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.\u003cbr\u003eபோகன் சங்கர்\u003c\/p\u003e","brand":"BE4BOOKS","offers":[{"title":"Default Title","offer_id":67938332049571,"sku":null,"price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/NilavumAAruanaakkalum.png?v=1794483837","url":"https:\/\/yaavarum.com\/products\/nilavum-aaru-anaakkalum","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}