{"product_id":"pirappamuri","title":"பிறப்பாமுறி","description":"\u003cp\u003eஉறவுகளின் எல்லைகளைச் சொத்துகளும் சாதிய விதிகளும் 'பிறப்பாமுறி' போட்டு அறுத்து எறியும்போது எஞ்சும் கசப்புகள்; மரணத்தின் வாசலில் நின்று பழிவாங்கும் எண்ணத்தையும் போலிப் பொதுப்புத்தியையும் எதிர்கொள்ளும் தனிமனிதப் போராட்டம்; முனியப்பன் பாறையின் வெடிச்சத்தங்களுக்குள் புதைந்துபோகும் அப்பன்- மகன் பிணைப்பு: சினிமா ரயில் செட்டுக்குள் துடிதுடிக்கும் எலிகளுக்குப் பின்னால் வழியும் அதிகார வன்முறை-இத்தொகுப்பின் கதைகள் யாவும் நம் சமூகத்தின் நிர்வாணமான முகங்களை மிக அணுக்கமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.\u003cbr\u003eநன்மை, தீமை என்ற எளிய இருமைகளுக்குள் சிக்காமல், சாம்பல் நிற மனிதர்களின் அக உலகை எவ்வித சமரசமும் வடிகட்டல்களும் இன்றி இந்நூலில் காட்சிப்படுத்துகிறார் லட்சுமிஹர். தத்துவங்களையும் முற்போக்குச் சாயல்களையும் தாண்டி, வாழ்வின் நடைமுறை உண்மைகளைத் தங்களின் கூரிய முரண்களோடு இக்கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.\u003cbr\u003e2025-ஆம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருதுபெற்ற லட்சுமிஹரின் இந்தத் தொகுப்பு, புனைவின் அழகியல் மட்டுமன்றி, சமூகம் மனிதர்கள் மீது நிகழ்த்தும் அதிகாரச் சுழல்களையும் கேள்விகளாக்கி வாசக மனதை ஆழமாக உலுக்குகிறது.\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":67861290418339,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/PirappamuriWra.png?v=1793781876","url":"https:\/\/yaavarum.com\/products\/pirappamuri","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}