{"product_id":"sathyajith-re","title":"சத்யஜித் ரே சில பதிவுகள்","description":"\u003cp\u003eAAJ\u003cbr\u003eவெறும் கேமராவைக் கொண்டு மனிதக் காவியங்களைப் படைத்த ரேயின் திரைப்பயணத்தை, அவரது முதல் படமான 'பதேர் பாஞ்சாலி'யின் 50-ஆண்டு கால நினைவுகளிலிருந்து இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. ஒரு இயக்குநராக மட்டுமின்றி, சிறந்த ஓவியராக, இசையமைப்பாளராக, எழுத்தாளராக மற்றும் நுட்பமான படத்தொகுப்பாளராக ரேயின் பன்முகத் திறமைகள் குறித்த ஆழமான பதிவுகள், இசைக்கோர்ப்பு, கேமரா கோணங்கள், நடிகர்களைக் கையாளும் விதம் மற்றும் படத்தொகுப்பு குறித்து ரே பகிர்ந்துள்ள அவரது 'செய்நேர்த்தியின் சில அம்சங்கள், போலந்து இயக்குநர் ஆந்த்ரே வாய்தா மற்றும் உதயன் குப்தா ஆகியோருடன் ரே நிகழ்த்திய செறிவான உரையாடல்கள், ரேயின் மகன் சந்தீப் ரே, புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிழற்படக் கலைஞர் நெமாய் கோஷ் ஆகியோரின் நினைவலைகள், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் விபூதி பூஷண் பந்தோபாத்யாயா ஆகியோரின் இலக்கியப் படைப்புகள் ரேயின் திரைமொழியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தவிரிவான கட்டுரைகள், சினிமா ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், ரேயின் கலை உலகிற்குள் நுழைய விரும்பும் வாசகர்களுக்கும் இப்புத்தகம் ஒரு கலைப் பொக்கிஷமாக அமையும். இந்திய சினிமாவின் பொற்காலத் தருணங்களை மீட்டெடுக்கும் இந்தத் தொகுப்பு, ஒரு மகத்தான கலைஞனுக்குச் செய்யப்படும் எழுத்துப் பூர்வமான சமர்ப்பணம்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: right;\"\u003e\u003cbr\u003e- யாவரும் பதிப்பகம்\u003c\/p\u003e","brand":"Yaavarum Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47724291850403,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0747\/0553\/5139\/files\/SathyaJIthRe.png?v=1780299725","url":"https:\/\/yaavarum.com\/products\/sathyajith-re","provider":"Yaavarum Publishers","version":"1.0","type":"link"}