Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.

யாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.

காலத்தில் உறைந்து கிடக்கும் கலை

ஜீவ கரிகாலன்

நீண்டப் பெருந்தூக்கத்திலிருந்து எழுந்த யாளி, அநிருத்தனின் பேரிரைச்சலைப் பிண்ணனியிசையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தினைப் பார்த்து வந்த தலைவலியோடு அக்குப்பஞ்சர் வைத்தியரைச் சந்தித்தது. அதிரடியான உலகமயமாக்கல், உலகை, நகரத்தை, வாழ்விடங்களைச் சுருக்கிவிட்டது, மனிதர்களுக்கிடையேயான தூரங்கள், பிளவுகள், பிரிவினைகள் எல்லாமே விஸ்தரித்துவிட்டன. இவர்களை இணைப்பதற்கான ஒரே உபாயம் கலை தானென்றால் அதன் சப்தம் மிகுந்து தானிருக்கும் என்று அர்விந்தோடு பேசிக் கொண்டிருக்கும் போது புரிந்து கொண்டது. காலம் தான் கலையின் போக்கைத் தீர்மானிக்கிறது இல்லையா சிற்பி, ஓவியர் சி.தக்‌ஷினாமூர்த்தியின் மறைவு இந்தச் சமூகத்தின் எந்த காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். புறவுலகின் மாறுதல்களையும், கீழைத்திய நவீன உலகின் மாற்றங்களையும், உலகின் வெவ்வேறு வகைப் பழங்குடியினர்களிடையே இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டறிந்தவர்.

Dakshinamurthy 2-EPSமேற்குலகின் வளர்கலைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு பதிலாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் பதிலளித்துக்கொண்டிருந்த காலத்தின் தவிப்பில் ஓவியர் தக்ஷிணாமூர்த்தியின் பங்கும் முக்கியமானது. தம் மண்ணில் நெடுங்காலமாக இருந்துவரும் கைவினைஞர்களின், கிராமிய, பழங்குடியினரின் கலைகளில் இருக்கும் ஆன்மாவைப் புரிந்துகொண்டவராக பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவர். அவரது இழப்பை உணர்ந்தவர்கள், நீண்டநெடும் பாரம்பரியமுள்ள ஒரு கலைமரபு உலகின் ஒரு மூலையிலிருந்து நவீனத்தை உடுத்தி கலைஉலகிற்கு தான் பரிணமித்ததை நிரூபிக்க முயன்ற காலக்கட்டத்தின் அருமையை உணர்ந்தவர்கள்.

சந்தையும், தொழிநுட்பமும் இவற்றை எங்கோ  கலைத்துப் போட்டது என்பது வேறு விசயம். இதைத்தான் அர்விந்தோடு பேசிக் கொண்டிருக்கையில் நன்றாக உணர முடிந்தது. ஏ.ஆர்.ரெஹ்மானின் வரவைக் கிண்டலடித்த அல்லது துச்சமென நினைத்த அந்த மதிப்புமிக்க இசையமைப்பாளரின் ஒரு வெகுசனப்பத்திரிக்கை பேட்டியை நினைவு கூர்ந்தபோது, காலத்தை உணர்வது எத்தனை முக்கியமானது என்று. காலத்தை உணராத கலைஞர்கள் காலாவதியாகிறார்களா? கால மாற்றத்தை தொடர்ந்து ஒரு கலைஞனால் ஏற்றுக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா? இதற்கும் அர்விந் – மணிரத்னம் எனும் இயக்குநரைச் சொல்கிறார். தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாதவன், கால மாற்றத்தை உணராதவன் என்னவாகிறான்.

தன் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க கற்சாடி நீரை கனி  ரசமாக மாற்றியது இயேசுவின் அற்புதங்களில் ஒன்று.

ஆனால் அந்த விருந்தில் “தனக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்கிற இயேசுவின் வசனம் மிக முக்கியமானது என்கிறார் அர்விந்.

ஆம் அர்விந், இயேசு தன் அற்புதத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருந்தால் கயாஸ் கோட்பாடுபடி நிறைய மாறியிருக்கும்.

காரல் மார்க்ஸின் இருப்பில் கூட வரலாற்றிட்கு தேவை ஏற்பட்டிருக்காது. யாளிக்கு மூளையில் சளிப் பிடித்திருப்பதால் சற்று தேவைக்கதிகமாகவே சிந்திக்கிறது போலும். காலத்தை வெறும் கலைஞன் மட்டுமா உணர்ந்து கொள்ள வேண்டும்? விவசாயி முதற்கொண்டு, தொழிலதிபர்கள், உழைப்பாளிகள், அரசியல்வாதிகள், போராளிகள், மதவாதிகள் என எல்லோருக்கும் வேண்டுவது தான் அது.

ஆனால் கலைஞன் ஒரு காலத்தில் உறைந்து போய்விடுகிறான், அது தான் அவனை விஷேசமான மனிதனாக வைத்திருக்கிறது. “கலைஞன் என்பவன் சிறப்பு வாய்ந்த மனிதனல்ல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான்” என்று ஆனந்த குமாரசாமி சொல்வது வேறு வகை. அவர் ஒரு பெருங்காலத்தை, பயணத்தை ஆழ்ந்து நோக்கியவர். அதை அவ்வளவு எளிதாக புத்தகப்புழுக்களால் சொல்லிவிட முடியாது.அவர் எழுதிய INDIAN CRAFTMANSHIP எனும் நூல் அவரது மேற்சொன்ன கூற்றுக்கு மிக முக்கியமான வலு சேர்க்கும்.

ஆனால் இந்தக் கால மாற்றத்தில், சமூகத்திற்குத் தேவையான மாற்றமாக நாம் நினைத்தவைகள் விளைவித்தவை என இந்த கைவினைஞர்களிடமிருந்து விடுபட்டுப் போனவை இழப்பாகக் கூட கருத முடியாத இடத்தில் நாமிருப்பதை தான் விவரிக்கமுடியவில்லை. தீண்டாமை ஒழிப்பு, தொழில்நுட்பங்களின் வரவு, புதிய நாகரிக வரவு ஆகியன காலமாற்றத்தால் வரவேற்கப்படவேண்டிய விஷயங்கள் தான்.

ஆனால் நாம் தொலைத்துப் போன கைவினைஞர்கள், அவர்தம் செய்நேர்த்தி போன்ற விஷயங்களை நினைத்துப் பார்க்கக் கூட நமக்கு நேரமில்லை. கேரளாவிலும், ஆந்திராவிலும் அதே கைவினைஞர்கள் இருக்கிறார்கள், மரபு ரீதியாக காப்பாற்றிக் கொண்டுவந்த தங்கள் தொல்கலைகளை, கைவினைகளை இன்னும் தக்கவைக்க அரசும் அவர்களை காப்பாற்றி வருகிறது. அவர்களுக்கு தொழில்நுட்பங்கள் வசதியான ஒன்றாகத் தான் இருக்கிறது. காலம்காரி ஓவியர்களை அரசே காபந்து செய்கிறது, கேரள கைவினைஞர்கள் – அரசின் சுற்றுலாத்துறையோடு இணைந்து வேலை செய்கின்றனர்.

இங்கே சுயமரியாதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை, இருப்பதையும் தொலைத்துவிட்டோம். எங்கோ ஒரு சுவரில், செங்கல் கொண்டும், கரியைக் கொண்டும் தத்ரூப ஓவியங்கள் வரைபவனைக் கிறுக்கனென்று நம்பி சில்லறைகளை வீசி தக்கவைத்துக் கொள்கிறோம். யாரொ ஒருவனுக்கு தன் டெரோகோட்டா குதிரைகளை அமெரிக்கன் பள்ளிக்கூடத்தில் செய்து காட்ட வாய்ப்பு கிடைக்கிறது, அவரும் தன்னைத் தாண்டி வெளிசெல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

2014-06-23-432   ராஜீவ் காந்தி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் கலைவடிவங்களில் தஸரத் பட்டேல் செய்த 2/5 வேலைகள் மட்டும் பதியப்பட்டிருக்கிறது, ஏவி இளங்கோவின் ஐந்திணை சிற்பங்கள் பற்றிய விவரங்களோ, ஆர்.எம்.பழனியப்பன் போன்றோரின் சுவரோவியங்கள் பற்றிய தகவலோ கிடைப்பதற்கில்லை.

சுவரோவியங்கள் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை அவ்வப்போது கிழித்துச் சாப்பிடும் மாடுகளுக்கு கலை ஆர்வலர்கள் நன்றிக்க 32 வருடமாக அம்மா வைத்துக் கொண்டிருக்கும் கொலுப்படிகளில், உடைந்த போன சிலைகளுக்குப் பதிலாக மாற்றப்பட்டிருக்கும் பொம்மைகளில் (பழையவை ஸ்ரீவில்லிபுத்தூர் பொம்மைகள்) கொஞ்சம் கூட பொலிவில்லை. அத்தனை காசு கொடுத்து வாங்கியும் அதில் தரமில்லை. கடவுளர்களின் முகத்தில் கூட இயந்திர வாழ்க்கையில் சலிப்பு அப்பியிருக்கிறது.டன் பட்டவர்கள், யாளியும் தான். மேல்படிகளில் இருக்கும் பழைய பொம்மைகளான மூன்று பெண் தெய்வங்களிடமும் – ”பழசாகயிருந்தாலும் அவர்களிடம் ஒரு பொம்மையை உருவாக்கும் கலைஞனின் அற்பனிப்பும், செய்நேர்த்தியும், வாங்கப்போகும் பக்தனின் வழிபாடு மேலுள்ள அக்கறையும், தன் பரம்பரையின் பெருமையென அவனது கற்பிதங்களும் கொண்ட காலம் உறைந்து கிடந்தது”.

யாளி உறங்கச் செல்லட்டும்…

ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

1 COMMENT

  1. உண்மையில் நின்று நிதானிக்க எவருக்கும் விருப்பம் இல்லை. அலட்சியமாக எல்லாவற்றையும் கடந்து செல்லவே விரும்புகிறார்கள். ஒரு கொண்டாட்டத்தையோ ஒரு பெருந்தனக்காரனின் செல்வம் போன்றதையோ தனக்கு அளிக்காத எதுவுமே அவர்களுக்கு முக்கியம் இல்லை. Cynical. ஒருவன் கலை சார்ந்த எந்த ஒரு விஷயத்தை பேசத்தொடங்கினாலும் சரி, கனவுகளையோ வரலாறையோ பேசக்கூடியவனாக இருந்தாலும் சரி, அவன் நான்கு பேர் அறிவாளி என்று சொல்ல வேண்டும் என்று செய்கிறான். நாலுபேர் செய்ததை குழைத்துப் போட்டு தன்னுடையது என்கிறான். அவனுக்கு ஆதாயம் இருக்கும். உள் நோக்கம் நிச்சயம் இருக்கிறது. அவர்கள் சரியாக போய்க் கொண்டிருக்கிறார்கள். இது மண்டையில் கொஞ்சம் பிரச்சனை இருப்பது போலத்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular