சால்ட் பீட்டர்
Yaavarum Publishers
மதுரையின் வரலாற்றில் இன்னும் விடை காணப்படாத பல கேள்விகளில் யார் இந்த மருதநாயகம் (கான் சாஹிப்)? என்பதே.
இந்த ஒற்றைக் கேள்விக்கு பதில் சொல்வதாய் தொடங்கும் தொடங்கும் நாவல், நாம் தெரிந்து வைத்திருந்த வரலாற்றின் பல அடிப்படைகளை மறுவிசாரணை செய்கிறது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் உலகின் அதிகார வரைபடத்தை மாற்றியெழுதிய காலம். அந்த ஆயுதங்களுக்குப் பின்னால் இயங்கிய வெடியுப்பு வணிகம் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கியது என்கிற புள்ளியிலிருந்து, கான் சாஹிப் எனும் மன்னனை வரலாறு எப்படியெல்லம் மூடி மறைக்கிறது என்கிற அரசியலை பல்வேறு பரிமாணங்களிலிருந்தும் அணுகுகிறது.
உப்புவேலியின் வரலாறு, குற்றப்பரம்பரையின் வரலாறு, தக்கீஸ், ஹைதர் அலி எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொண்ட நாணயத்தின் மறுபக்கத்தை வாசித்துச் செல்கிறது இந்நாவல்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகமும் சில மேன்மை பொருந்திய உள்ளூர்வாசிகளின் துரோகமும் உருவாக்கிய சரித்திரத் துயரங்களுக்கு நடுவே காதலின் தோல்வியையும் வரலாற்றின் வஞ்சகத்தையும் சுமந்து நிற்கிறது ஒரு மனிதனின் வாழ்க்கை.
முஹம்மது யூசுப் அவர்களின் பத்தாவது நாவல் - சால்ட் பீட்டர் ஒரு தொடக்கம்தான்.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location