சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி

சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி

Sale price  Rs. 210.00 Regular price  Rs. 260.00
Skip to product information
சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி

சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி

Sale price  Rs. 210.00 Regular price  Rs. 260.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2024

இருபத்தி ஆறு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு ரெகுலராக விஜயம் செய்து வந்ததில் சில விஷயங்களை கவனித்தேன். இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பது என்பதில் ஏற்படும் தெளிவின்மையால் இரண்டு பொதுவான தவறுகளைச் செய்கிறார்கள்.
1. ஆன்லைனில் / புத்தகக் கடைக்காரர்களிடம் விசாரித்து அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது.
2. இளம் பெற்றோர்களின் சிறுவயதில் அவர்கள் படித்து ரசித்த புத்தகங்களையே இப்போது அவர்களின் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பது.
இவையிரண்டுமே சரியான அணுகுமுறை இல்லையென்பதால், இளம் பெற்றோர்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்குவதின் அவசியம் புரிந்தது. கடந்த பத்தாண்டுகளில் விற்பனையிலும் விமர்சனத்திலும் ட்ரென்ட் செட்டர் ஆக இருக்கும் 20 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப்பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக இளையோர்கள் ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
வாசிப்பில் ஆர்வமுள்ள அனைத்து பெற்றோர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இப்புத்தகத்தைப் பரிசளித்து உலகப் புத்தக அலமாரியின் கதவைத் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

Delivery Time
  • Orders are usually dispatched within 1 working day.

Delivery timelines:

  • Chennai : 1 Day Delivery
  • Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
  • Other States - 3-5 working days
  • International shipping charges and delivery timelines vary by location

You may also like