ரம்யா வாசுதேவன்
ரம்யா வாசுதேவன்
ரம்யா வாசுதேவன் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். இளங்கலை இயற்பியல் பட்டதாரி. Under the tree foundation என்கிற அமைப்பின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் ஒரு கதை என்று சொல்லி வருகிறார். இலக்கியச் சிறுகதைகள், சிறுவர்களுக்கான கதைகள், ஆன்மிகம், தத்துவம், புராணம் சார்ந்த கதைகள், சுயமுன்னேற்றம் சார்ந்த ஆங்கிலப் புத்தகங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் ஏறத்தாழ 2100 கதைகளை சொல்லியிருக்கிறார். Whats app, spo-tify மூலம் சுமார் இரண்டு லட்சம் நேயர்கள் இவரின் கதைகளை தினந்தோறும் கேட்டு வருகிறார்கள். 2023 வருடம், கோவை சிறுவாணி வாசகர் மையம் “ஆயிரம் கதைகள் சொல்லிய ஆச்சரிய கதைசொல்லி" என்று நாஞ்சில் நாடன் விருது, பாவை நிறுவனம் ஆன்றோர் முற்றத்தில் 'தமிழ்க் கதை சொல்லி' விருது. 'ஸ்ரீ வைஷ்ணவ சேவா ரத்னா' விருது என்னும் பல விருதுகள் பெற்று இருக்கிறார்.
இது தவிர கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஆதிசக்திக்கு ஆயிரம் நாமங்கள் பாகம் 1. பாகம் யோகி ராம்சுரத்குமார் திவ்ய சரிதம், அரங்கனோடு பொழுதுகள் ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும். 2,