செல்சி நீலம்
Yaavarum Publishers
மலேசியாவில் சீன மொழிப் படைப்பை வாசித்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகவே சீன மொழிப் படைப்புகள் பற்றிய உரையாடலே தமிழ்ச்சூழலில் நிகழ்வதில்லை. ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் அண்டை அயலாராக வாழும் மக்களின் நிலை இவ்வாறு இருப்பது மிகப்பெரிய துயரம்.
ஓர் இனத்தின் மொழியைத் தொழில் நிமித்தமாகக் கற்றுக்கொண்டு பேசுவதாலோ, அவர்களின் உணவை ருசித்துச் சாப்பிடுவதாலோ நாம் அவர்களின் ஆழ்மனதையும் சிந்தனைப் போக்குகளையும் அறிய முடியாது. பள்ளிப் படிப்பும் கூட அதற்கு உதவாது. மாறாக அவர்களின் இலக்கியங்களை ஆழ்ந்து வாசிப்பதன் வழி மட்டும்தான் நாம் அவர்களின் அந்தரங்க மனதுடன் உரையாட முடியும்.
இப்படிக் கலை இலக்கியத்தில் இருக்கும் இடைவெளியைக் குறைக்கச் சில தொடர் அடிகளை எடுத்து வைத்தவர் என எழுத்தாளர் கங்காதுரையைக் குறிப்பிடலாம். சீன சமூகத்தின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றான தோங் ஜியாவ் ஸோங், மலேசியச் சீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள். லூய் யோக் தோ மற்றும் ஜேம்ஸ் லீ போன்றவர்களுடனான நேர்காணல்கள் எனத் தன்னளவில் சில முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடரப்படாததாலும் சீன இலக்கியச் சூழலில் அப்படியான எளிய முயற்சிகள் கூட நடந்ததற்கான தரவுகள் இல்லாததாலும் இருமொழி இலக்கியங்களுடனான தூரமும் அதிகரித்தே சென்றது. இந்த இடைவெளியை ஓரளவு சரிசெய்யும் முயற்சியாக வல்லினம் இந்த மொழி பெயர்ப்பு நூலை வெளியிடுகின்றது.
அ. பாண்டியன், ம. நவீன்
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location