அவளும் நானும் அலையும் கடலும்
Yaavarum Publishers
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள்.
சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக் கண்டாலே கொள்ளைப் பிரியம். கள்ளும், சட்ட கருவாடுமாய் உண்டு களிகூறுவான். அதிலும் புளுத்த ஊறைக் கருவாட்டைக் கண்டால் நாக்க ஏழு மொழத்துக்கு தொங்கப் போட்டுகிட்டு அலைவான்வ. கொழும்பு கொச்சிக் கடையில் இவ்வாறான பேச்சை என் காதறிய நானே கேட்டிருக்கிறேன்.
மைதீன் முதலாளிக்கு கொடுக்கிற கை, அது அன்பானாலும் சரி, அடியானாலும் சரி-கடற்கரை வாழ்வின் யதார்த்தம். எடங்கேறு, கெதி, மய்யம் போன்ற பழம்பெரும் வார்த்தையாடல்கள் மகிழ வைக்கிறது. அந்தக் காலத்தில் சம்பை வியாபாரத்தில் கொடிபோட்டு வாழ்ந்தவர்கள் எல்லோரும் இன்று விலாசமற்றுப் போய்விட்டார்கள். காரணம், நம்பிக்கைத் துரோகம்.
தத்துவார்த்தங்களை பேசுகிறதோ இல்லையோ, எளிய மனிதர்களையும், அவர்தம் வாழ்வையும், அதன் பாடுகளையும் கண்முன்னே கொண்டுவந்து கண்ணீர் விட வைத்துவிடுகிறது - வள்ளம்.
இது அன்றி வேறென்ன இலக்கியம்.
வள்ளம் சிறுகதை குறித்து ஜோ டி குருஸ்
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location